தமிழகமே அதிர்ந்தது!
திமுக கேட்க வேண்டுமா? "பார்த்தீர்களா பார்த்தீர்களா ஜெயலலிதா லட்சணத்தை? ஒற்றைக் கண் சிவராசனுடன் நெருக்கத்தை? எங்களைப் போய்த் தோற்கடித்தீர்களே?"- என்று எகிறிக் குதித்தனர்.
சில நாள்கள் கூட திமுகவின் உற்சாகம் நீடிக்கவில்லை!
அப்போது தளி தொகுதி EX.MLA வாக இருந்தவர் - பெயர் நினைவில்லை - அவர் ஜனதா கட்சிக்காரர்!
இத்தனைக்கும் ஜனதா கட்சி அப்போது 1991 தேர்தலில் திமுகவின் கூட்டணியில்தான் போட்டியிட்டு இருந்தது.
அவர் குட்டை உடைத்துவிட்டார்!
ஜெயலலிதாவுடன் அந்தப் படத்தில் இருப்பது ஒற்றைக் கண் சிவராசன் இல்லை!
தன்னுடன் பணியாற்றும் சக வழக்கறிஞர் ஒருவர் - அவர் சிவராசன் போலவே ஜாடை கொண்டவர் - அவர்தான் ஜெயலலிதாவை நேரில் சந்தித்துப் புகைப்படமும் எடுத்துக் கொண்டார் என்பதை ஆதாரபூர்வமாக வெளியிட்டார்.
அந்தத் தனது வழக்கறிஞர் நண்பரையும் பத்திரிகையாளர்கள் முன்பு ஆஜர் படுத்தினார்.
திமுகவும் இதர சில ஏடுகளும் பரப்பிய பொய் புஸ்வாணமானது!
இன்று சங்கீதா கந்தாடை என்ற 'கோலப் போராளி' அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்து 'வாழ்த்து' பெற்ற தகவலை ஊடகங்கள் வெளியிடுகின்றன!
அவளுக்குப் பாகிஸ்தான் ஆதரவு இயக்கங்களுடன் தொடர்பு உள்ளதைப் போலீஸ் கமிஷனரே வெளியிடுகிறார்!
கெடுவான் கேடு நினைப்பான்!
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!
No comments:
Post a Comment