Tuesday, January 7, 2020

தென்னாட்டு ஜான்சி ராணி!

வரலாற்றுத் தோழிகள்: கடலூர் அஞ்சலையம்மாள்
1921ல் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். அஞ்சலையம்மாளும் தீவிரமாகச் செயல்பட்டார். நீலன் சிலை அகற்றும் போராட்டம், உப்புக் காய்ச்சும் போராட்டம், மறியல், தனிநபர் சத்தியாகிரகம் உள்பட பல போராட்டங்களில் பல மாதங்கள் சிறையில் கழித்திருக்கிறார். 1921 முதல் 1943 வரை 22 ஆண்டுகளில் நான்கரை ஆண்டுகள் சிறையிலேயே அவரது வாழ்க்கை கழிந்தது.

அஞ்சலையம்மாளின் மூத்த மகள் அம்மாக்கண்ணு. நீலன் சிலையகற்றும் போராட்டத்தில் அம்மாவுடன் கலந்துகொண்டு சிறை சென்றார். தண்டனை முடிந்த பிறகு, 9 வயதான அம்மாக்கண்ணை காந்தியடிகள் அழைத்துச் சென்றார். லீலாவதி என்று பெயர் சூட்டினார். தன்னுடைய ஆசிரமத்திலேயே வளர்த்தார். கடலூரில் ஒருமுறை அஞ்சலையம்மாளைச் சந்திக்க விரும்பினார் காந்தி. சந்திக்க தடை இருந்ததால், பர்தா அணிந்து சென்று, காந்தியைச் சந்தித்தார் அஞ்சலையம்மாள். அவரை, ‘தென்னாட்டு ஜான்சி ராணி’ என்று பாராட்டினார் காந்தி.


1932ல் வேலூர் பெண்கள் சிறையில் நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தார் அஞ்சலையம்மாள். சிறையில் குழந்தை பிறப்பதைத் தடுக்கும் விதத்தில் வெளியே அனுப்பினர். குழந்தை பிறந்த பிறகு மீண்டும் சிறையில் அடைத்தனர். எப்பொழுதும் காங்கிரஸ் தொண்டர்களால் நிறைந்திருக்கும் அஞ்சலையம்மாளின் வீடு. வருகிறவர்களுக்கெல்லாம் தன்னால் முடிந்த உணவைக் கொடுத்து உபசரிப்பார். வீட்டையே அடமானம் வைத்து கட்சிப் பணி செய்திருக்கிறார்.
சட்டமன்றத்துக்கு 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்களுக்காகப் பணியாற்றியிருக்கிறார். பண்ருட்டியைச் சுற்றியுள்ள கிராமங்களில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டுக்கொண்டிருந்தனர். வீராணம் ஏரியிலிருந்து புவனகிரிக்குப் பாசன நீர் செல்லும் வாய்க்காலில் இருந்து ஒரு வாய்க்காலை தீர்த்தாம்பாளையம் நோக்கித் திருப்பிவிட்டார். இதனால் அங்கு தண்ணீர்ப் பிரச்னை தீர்ந்தது. இது அஞ்சலை வாய்க்கால் என்று அழைக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...