Sunday, January 5, 2020

எம்ஜிஆர்_கொடுத்த_இன்ப_அதிர்ச்சி.

எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது அவரது மூத்த அமைச்சரின் வாரிசு திருமணம். வடபழனியில் உள்ள பிரபல மண்டபத்தில் காலையில் நிகழ்ச்சி. காலையில் கோட்டைக்கு சென்றிருந்தஎம்ஜிஆர் கையசைக்க உடனே அவரின் கார் வடபழனி நோக்கி பறக்கிறது. மண்டபத்தில் இருந்தவர் மத்தியில், எம்ஜிஆர் வருகிறார் என்று ஒரே பரபரப்பு/
ஆனால் கோடம்பாக்கம் மேம்பாலம் கிட்டே வந்தவுடன் பாலத்தின் மேல் செல்லாமல் முன்னே செல்லும் கான்வாய் கார்களுக்கும் தெரியாமல் திடீரென உஸ்மான் ரோடு திரும்பி தி.நகர் வழியாக முதலமைச்சரின் கார் பயணிக்கிறது. நேராக சைதாப்பேட்டை பாலத்தில் சென்று வலதுபுறம் திரும்பி சலவைத்தொழிலாளார்கள் குடியிருப்புக்கு செல்கிறார் எம்ஜிஆர்.
ஏற்கனவே பலத்த மழை பெய்ததில் அந்த பகுதியே வெள்ளத்தில் மிதக்கிறது. ஆனால் எம்ஜிஆர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் காரை நிறுத்தச்சொல்லிவிட்டு வேட்டியை மடித்துக்கொண்டு சரசரவென ஒரு சந்தில் கால்நடையாக செல்கிறார்.. பாதுகாப்பு அதிகாரிகளும் புரியாமல் அவர் பின்னே ஓடுகிறார்கள்.
கடைசியில் அங்கே ஒரு வீட்டில் கல்யாணம் நடந்துகொண்டிருக்கிறது. எம்ஜிஆர் வருவதை பார்த்ததும் அவசரமாக நாற்காலியை தேடுகிறார்கள். ஒரு காலுடைந்துபோன நாற்காலிக்கு நான்கைந்து செங்கற்களை முட்டுக்கொடுத்து அதிலே எம்ஜிஆரை உட்கார வைக்கிறார்கள்.
எம்ஜிஆரும் மணமக்களை வாழ்த்திவிட்டு, வழக்கம்போல் யாருமே எதிர்பார்க்காத பெரும் தொகையை அன்பளிப்பாக கொடுக்கிறார். அதனபிறகு அவர் கோட்டைக்கு மீண்டும் பறந்துவிடுகிறார்.
முதலமைச்சர் எம்ஜிஆர் போன கல்யாணம் வேறு யாருயுடையதுமல்ல, அவருக்கு வழக்கமாக துணிகளை சலவைசெய்துகொடுப்பவரின் குடும்பத்துடையது.
அப்படியே, சின்ன பிளாஷ்பேக்.
அந்த சலவைத்தொழிலாளி தன் குடும்பத்து திருமண பத்திரிகையை ஜானகி அம்மையாரிடம் கொடுக்கிறார். ஜானகி அம்மையாரும் அதை வாங்கிக்கொண்டு அப்போதே ஒரு தொகையை கல்யாண சீதனமாக கொடுக்கிறார். முடிந்தால் மட்டுமே தலைவர் கல்யாணத்துக்கு வருவார் என்று சொல்லிஅனுப்புகிறார்.
அப்போது அந்த சல்வைத்தொழிலாளி, தலைவர் கல்யாணத்துக்கு வராவிட்டாலும் பரவாயில்லை. பத்திரிகையையாவது பார்க்கும்படி செய்துவிட்டால் அதுவே போதும் என்கிறார். ஜானகி அம்மையாரும் உடனே வாக்குறுதி அளித்துவிட்டு எம்ஜிஆர் தினமும் எழுதும் டைரியில் தேதிக்கேற்ற இடத்தில் அந்த பத்திரிகையை வைத்துவிடுகிறார். அதைப்பார்த்துதான் முதலமைச்சர் எம்ஜிஆர் கல்யாணத்திற்கு போயிருக்கிறார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...