தமிழ் நாட்டு அரசியலில் ★தி மு க★ மற்றும் ★அ தி மு க★ இரு பெரும் சக்திகளாக விளங்கி கொண்டு இருக்கிறார்கள் - 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிநாட்டை ஆண்ட/ஆண்டுகொண்டு இருக்கிற கட்சிகள் - - - - - -
ஒருவர் மாறி ஒருவர் மக்களிடம் ஓட்டுக்களை பெற்று அரியணையில் அமர்வது என்பது தமிழக மக்களுக்கு ரொம்பவும் பழகிப்போன விஷயம் - - - - - - -
இந்த 50 ஆண்டு காலத்தில் காங்கிரஸ் உப்புக்கு சப்பாணி என்கிற நிலையில்தான் இருக்கிறது - கோட்டையை பிடிக்க முடியாமல் திண்டாடுகிறது - - - - - -
கம்யூனிஸ்டுகளுக்கும் இங்கு வரவேற்பு இல்லை -
ம தி மு க , பா ம க இன்னும் பல உதிரி கட்சிகளும் தமிழ் நாட்டில் பெரிய அளவில் சாதித்ததாக தெரியவில்லை - - - - - - - -
ம தி மு க , பா ம க இன்னும் பல உதிரி கட்சிகளும் தமிழ் நாட்டில் பெரிய அளவில் சாதித்ததாக தெரியவில்லை - - - - - - - -
இதுதான் இன்றுவரை உள்ள நிலைமை !
ஆனால் இனிமேல் ? - - - - - - -
இந்த கேள்வியை ஆராய்வதுதான் இந்த பதிவின் நோக்கம் :
ரஜினி தமிழ் நாட்டு அரசியலுக்கு வந்தால் ( ●வந்து விட்டாரா என்று தெரியவில்லை , அது வேறு விஷயம்● ) நிச்சயம் பெரிய அளவில் மாற்றங்கள் வரும் என்பதில் சந்தேகமில்லை - - - - -
ஆட்சியை பிடிப்பது இருக்கட்டும் - இரு பெரும் திராவிட கட்சிகளை ஒரு உலுக்கு உலுக்குவார் என நிச்சயம் எதிர்பார்க்கலாம் - - - - -
வரப்போகும் மாநில தேர்தலில் ரஜினி போட்டியிட்டால் ( போட்டியிடுவாரா - தெரியாது - திடீர் என்று ராகவேந்திர ஸ்வாமி அவர் கனவில் தோன்றி , "போட்டியிடாதே , என் மகனே !" என்று சொன்னால் எல்லாமே கதம் , கதம் !) - - - - -
போட்டியிட்டால் அவருடைய success quotient ( வெற்றியின் சாத்தியக்கூறுகள் ) என்ன ?
ரஜினியின் strengths :
1) கோடீஸ்வரர் - நிச்சயமாக பணம் பண்ணுவதற்காக அரசியலில் நுழைய மாட்டார் -
2) தமிழ் மக்களுக்கு உண்மையாகவே நல்லது செய்ய வேண்டும் என்ற துடிப்பு உள்ளவர் - மறுக்க முடியாது ! -
3) 70 வயதிலும் சுறுசுறுப்பாக , ஆரோக்கியமாக இருக்கிறார் -
4) தனிமனித ஒழுக்கம் உள்ளவர் - மனைவி குழந்தைகள் , குடும்பம் என்ற clean image - ஒரு கட்சியின் தலைவனுக்கு மிகவும் தேவைப்படுகிற ஒரு நல்ல qualification - "ஊருக்கு ஒன்றாக " வைத்துக்கொள்ளாமல் "ஒருவனுக்கு ஒருத்தி" என்பதில் நிலைத்து நிற்பவர் -
5) அவருக்காக எதையும் செய்ய தயாராக உள்ள லட்சக்கணக்கான ரசிகர்கள்/தொண்டர்கள் - இவர்கள் மற்றும் இவர்களின் நண்பர்கள்/உறவினர்கள் கொடுக்கும் ஆதரவு - ஓட்டுக்களாக மாறினால் தமிழ் நாடே கதி கலங்கி விடும் -
( ஆதரவு ஓட்டுக்களாக மாறுமா என்பது வேறு கணக்கு ) -
6) உலக அளவில் உள்ள ரஜினியின் பாபுலாரிட்டி மற்றும் செல்வாக்கினால் உலக தமிழர் support & goodwill அவர் வாங்கும் ஓட்டுக்களை அதிகரிக்க செய்யும் வாய்ப்பு -
ரஜினியின் கடவுள் பக்தியை ஒரு strength - ஆக இங்கு சேர்க்கவில்லை - கடவுளை நம்பாத கருணாநிதியை 5 முறை முதல் அமைச்சராக தேர்வு செய்தவர்கள் இருக்கும் இடம் தமிழ்நாடு - - - - - - - - -
ரஜினியின் weaknesses :
1) தெளிவு / நிச்சயம் இல்லாத தன்மை - 20 வருடங்களாக அரசியலுக்கு வருவாரா , மாட்டாரா என்ற நிச்சயமற்ற சூழ்நிலை - வருவேன் என்று ஆணித்தரமாக சொன்னதாக நினைவில்லை ; வரமாட்டேன் என்று ஒதுங்கவும் இல்லை - - -
"ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்ன மாதிரி" என்கின்றவர் , ஒரு தடவை கூட "பளிச்"சென்று எதையும் சொல்லாதது ஒரு பெரிய மைனஸ்தான் - - - -
எப்பொழுதுமே "வழ வழா , கொழ கொழா" வேலைக்கு ஆகாது - - - - - -- - - - - - - -
"ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்ன மாதிரி" என்கின்றவர் , ஒரு தடவை கூட "பளிச்"சென்று எதையும் சொல்லாதது ஒரு பெரிய மைனஸ்தான் - - - -
எப்பொழுதுமே "வழ வழா , கொழ கொழா" வேலைக்கு ஆகாது - - - - - -- - - - - - - -
மக்களும் , தொண்டர்களும் ஒரு குழப்பதில்தான் இன்றுவரை இருக்கிறார்கள் - - -
( எப்போ வருவேன் , எப்டி வருவேன் என்று யாருக்கும் தெரியாது , ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்ட்டா வந்துடுவேன் என்ற dialogue ரஜினி அரசியலுக்கு மிகவும் பொருந்தும் ) - - - - - - - - -
இப்படிப்பட்ட நிச்சயமற்ற ஒருவர் பெரிய தலைவனாக வருவது சாத்தியமா என்ற கேள்வி எழுகிறது - - - - -
Being decisive is the first great quality in any leader - Rajini clearly is lacking in this virtue ( தீர்மானமாக செயல்படாத எவரும் பெரிய தலைவனாக வர முடியாது ) - - - - - - - - - -
2) இவருடைய ராகவேந்திர பக்தியே இவருக்கு முட்டுக்கட்டையாக இருக்குமோ ? - - - - - - - - - - - -
'என்றைக்கு கடவுள் வந்து என் கனவில் சொல்கிறாரோ அன்றைக்கு களத்தில் குதிப்பேன்' என்று ஒரு முறை அவர் சொன்னதாக நினைவு - சரி , பக்திக்கு நிறைய மார்க் போடுவோம் ! ஆனால் ஒருவேளை இவர் ஜெயித்து , முதல் அமைச்சர் ஆனபின் ராகவேந்திரர் கனவில் தோன்றி "மகனே ! என்னிடம் வா !" என்று சொல்லி , இவர் உடனே துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு , கோட்டையை விட்டு கிளம்பி இமயமலைக்கு சென்று விட்டால் !! - - - - - - - - - - - - - - கடவுள் இவர் கனவில் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாமே ! - - - - - - - - - - - - - - - - - -
3) அரசியல் அனுபவம் இல்லாதவர் - கருணாநிதி போன்றோர் அரசியலில் பல வருடங்கள் பல பாடங்கள் படித்து , நன்கு தேறி , தம் அனுபவத்தால் ஜெயித்து காட்டியவர்கள் ! எம் ஜி ஆர் , ஜெயலலிதா போன்றோர் கட்சிக்காக பல வருடங்கள் உழைத்து , நன்கு கற்று , தொண்டர்களை வளர்த்து அதற்குப்பின் முதல் அமைச்சர் ஆனவர்கள் ! - - - - - - - -
ஒரு சட்டமன்ற தொகுதியில் கூட போட்டியிடாமல் , தேர்தல் களம்/தேர்தல் பிரச்சாரம் இவை ஒன்றும் அறியாமல் direct - ஆக முதன் மந்திரி ஆவேன் என்பது தப்பு கணக்காக போகும் அபாயம் இருக்கிறது ! - - - - - - -
4) ஒரு மராட்டியர்/ கன்னடிகர் என்பது ரஜினிக்கு எதிராக வேலை செய்யலாம் ( எம் ஜி ஆர் ஒரு மேனன் , ஜெயலலிதா ஒரு மைசூர் அய்யங்கார் என்ற வாதம் இங்கு எடுபடாது - அவர்கள் இருவரும் சரித்திர நாயகர்(கி)கள் , ஆளுமை உள்ள தலைவர்கள் ! ) - - - - - - - - -
சீமான் , சரத்குமார் இன்னும் பலர் ஒரு கன்னடியன் ஜெயிப்பதை நிச்சயம் தடுக்க முயல்வார்கள் - - - Anti - Kannada sentiment - டை பயங்கரமாக பரப்புவார்கள் ! இந்த எதிர்ப்பு அலையை ரஜினி சமாளிக்க முடியுமா ? "ஆண்டவன் சொல்றான் ; அருணாச்சலம் செய்யறான்" என்பதுபோல் அலட்சியமாக ரஜினி இருக்க முடியாது ! - - - - - - - -
5) இதுவரை எந்த மக்கள் போராட்டத்திலும் ரஜினி கலந்துகொள்ள வில்லை - - - தெருவுக்கு வந்து , மக்களோடு மக்களாக , மழை - வெயில் என்று பாராமல் , கோஷமிட்டு - - - தன் நிலைபாட்டை ஆக்ரோஷத்துடன் தெரிவித்து - எழுச்சி உரை ஆற்றி - - - - - - - - - -
ஊஹும் ! - - - - - - - - -
இதெல்லாம் ஒன்றுமே நடக்கவில்லை - - - -
போயஸ் கார்டனிலும் , ஏர்போர்ட்டுகளிலும் ஸ்டேட்மெண்ட் விடுவதோடு சரி !
முன்பே சொன்னது போல் 'வந்தால் chief minister - ஆகத்தான் வருவேன்' என்று கனவு காண்பது "வெச்சா குடுமி , செரச்சா மொட்டை" கதைதான் ! - - - - - - - - - - -
ஊஹும் ! - - - - - - - - -
இதெல்லாம் ஒன்றுமே நடக்கவில்லை - - - -
போயஸ் கார்டனிலும் , ஏர்போர்ட்டுகளிலும் ஸ்டேட்மெண்ட் விடுவதோடு சரி !
முன்பே சொன்னது போல் 'வந்தால் chief minister - ஆகத்தான் வருவேன்' என்று கனவு காண்பது "வெச்சா குடுமி , செரச்சா மொட்டை" கதைதான் ! - - - - - - - - - - -
6) ரஜினியின் முக்கியமான தீர்மானங்களை / நிலைப்பாடுகளை பெங்களூரில் இருக்கும் அண்ணா சத்திய நாராயணா தமிழ் நாடு வரும்போது நிருபர்களிடம் வெளியிடுகிறார் ! இதை 'பினாமி அரசியல்' என்று சிலர் விமர்சிக்க கூடும் - மக்களிடம் நேரடி தொடர்பு இல்லாவிட்டால் , நாணயம் அற்ற செயல் என்று ஒதுக்கி விடுவார்கள் ! - - - - - - -
7) கர்நாடகத்திடம்/பெங்களூரிடம் உள்ள தமது நேசத்தை/பாசத்தை/ஓட்டுதலை ரஜினியால் மறைக்க முடியவில்லை - "நாளை இவர் முதன்மந்திரி ஆனால் - - - - - - - - - - - - - - எந்த பக்கமும் சாயாத பாபா - - - - - - -கர்நாடகா பக்கம் சாய்ந்து விடுவாரோ ? " என்ற பயம் எழ காரணமாக இருக்கிறது ! - - - - - - - - - -
மொத்தத்தில் , கூட்டி கழித்து பாருங்கள் ! - - - - --
வருவாரா , மாட்டாரா என்பது தெளிவாகும் ! - - - - - - - -
இல்லை , அந்த "ராகவேந்திரர்"தான் நம் கனவில் வந்து சொல்ல வேண்டும் !
படித்தமைக்கு நன்றி !
No comments:
Post a Comment