Tuesday, February 11, 2020

குழந்தைகளுக்கு பிடித்தமான சாக்லேட் இடியாப்பம்.

குழந்தைகளுக்கு பிடித்தமான சாக்லேட் இடியாப்பம்
சாக்லேட் இடியாப்பம்


















தேவையான பொருட்கள் :

பச்சரிசி மாவு - அரை கப்
சாக்லேட் சாஸ் - 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி பருப்பு - 10 (சிறிதாக நறுக்கவும்)
நெய் - 2 டீஸ்பூன்
உப்பு - சிறிதளவு
தண்ணீர் - 1 கப்

சாக்லேட் இடியாப்பம்

செய்முறை:

அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.

கொதிக்க தொடங்கியதும் நெய், உப்பு சேர்க்கவும்.

பின்னர் பச்சரிசி மாவை கொட்டி லேசாக கிளறி இறக்கவும்.

பின்னர் கட்டி பிடிக்காமல் கிளறி இடியாப்ப குழலில் போட்டு பிழிந்து ஆவியில் வேகவைத்து இடியாப்பத்தை உதிர்த்துக்கொள்ளவும்.

அதனுடன் சாக்லேட் சாஸ், முந்திரி பருப்பு தூவி கிளறி சுவைக்கவும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...