Thursday, February 13, 2020

செல்வச் செழிப்புடன் என்றும் இருக்க ரகசியங்கள்!

நாம் வசிக்கும் வீட்டில் எந்தெந்த காரியத்தை செய்யலாம், எந்தெந்த காரியத்தை செய்யக்கூடாது என்பதை அறிந்து செயல்பட்டாலே போதும் அஷ்ட ஐஸ்வர்யங்கள் நம்மிடம் எப்போதும் நிலைத்து இருக்கும்.
• வெறும் தரையில் அமர்ந்து சாப்பிடக்கூடாது. வடக்கு பார்த்து சாப்பிடக்கூடாது. மாலை ஐந்து மணிக்கு மேல் தயிர் சாப்பிடக்கூடாது. நெல்லிக்காய், அகத்திக்கீரை மாலை ஐந்து மணிக்கு மேல் சாப்பிடக்கூடாது.
• வியாழன், வெள்ளி, சனி, முடி வெட்டுதல், நகம் வெட்டுதல் கூடாது. திங்கள் கிழமை காலை ஆறு மணியிலிருந்து ஏழு மணிவரை தண்ணீர் முதல் கொண்டு ஏதும் சாப்பிடக்கூடாது.
• சனிக்கிழமை காலை ஆறு மணி முதல் ஏழு மணிக்குள் சுத்தமான நல்லெண்ணெய்யை ஆண்கள் இடது காலிலும் பெண்கள் வலது காலிலும் தடவினால் பணம் வந்துகொண்டே இருக்கும்.
• வியாபாரம் தொழில் செய்யும் இடத்தில் ஐந்து முக ருத்ராட்சம் வைத்துப் பூஜித்தால் வியாபாரம் தொழில் அமோகமாக நடக்கும். வீட்டில் மல்லிகை செடி வில்வம் துளசி வளர்க்க பெரும் செல்வம்
ஏற்படும்.
• தினமும் மல்லிகைப் பூவை பணம் வைக்கும் இடத்தில் வைத்தால் பணம் சேரும். வீட்டின் வாசற்படியில் நற்பவி என்று எழுதிவைத்தால் நன்மைகள் வந்து சேரும். மயில் தோகையை வீட்டில் வைக்க பற்பல நன்மைகள் உண்டாகும்.
• முட்கள் உள்ள செடியை வீட்டில் வளர்த்தால் பணம் தங்காது. ஏகாதசி நாள் அன்று விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...