சேலம், நாமக்கல் மாவட்ட, தி.மு.க., பொறுப்பாளர்கள் மாற்றத்தை கண்டித்து, அவர்களது ஆதரவாளர்கள், தலைமைக்கு எதிராக, போராட்டத்தில் குதித்துள்ளனர்.
தி.மு.க.,வில் நேற்று முன்தினம், மாவட்ட பொறுப்பாளர்கள் பலர் அதிரடியாக மாற்றப்பட்டனர். இதன்படி, சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர், வீரபாண்டி ராஜா விடுவிக்கப்பட்டு, தேர்தல் பணிக்குழு செயலராக, 'டம்மி' பதவியில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், சேலம் மாவட்டம், ஓமலுார், அண்ணாதுரை சிலை முன், ராஜாவின் ஆதரவாளர் பெரமன் தலைமையில், 20க்கும் மேற்பட்டோர், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, 'வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்தினரை ஒதுக்கக் கூடாது' என, தலைமையை கண்டித்து, கோஷங்கள் எழுப்பினர்.
தேக்கம்பட்டியைச் சேர்ந்த சண்முகம் கூறியதாவது:சேலம் கிழக்கு மாவட்டத்தில், பொறுப்பாளராக இருந்த ராஜா, உள்ளாட்சியில் அதிக வெற்றி வாய்ப்புகளை பெற்று கொடுத்தார். தலைவர் ஸ்டாலின், வேண்டுமென்றே, ஆறுமுகத்தின் குடும்பத்தை பழிவாங்குகிறார்.மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்து ராஜா நீக்கப்பட்டதற்கான காரணத்தை, தலைமை விளக்க வேண்டும். மீண்டும் ராஜாவுக்கு, அதே பொறுப்பை வழங்க வேண்டும். இல்லாவிடில், வரும் தேர்தலில், அதன் பாதிப்பை, தி.மு.க., தலைமை உணரும். இவ்வாறு, அவர் கூறினார்.

நாமக்கல்
இதேபோல, நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர் காந்திசெல்வன் விடுவிக்கப்பட்டு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜேஷ்குமார், அந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார். உள்ளாட்சி தேர்தலில், வெண்ணந்துார் தேர்தல் பொறுப்பாளராக, ராஜேஷ்குமார் நியமிக்கப்ப ட்டிருந்தார். தொட்டி வலசு பஞ்., தலைவர் பதவிக்கு, ராஜேஷ்குமார் ஆதரவாளரான கார்த்திகேயன் போட்டியிட்டார்.வெண்ணந்துார் ஒன்றியம், மூன்றாவது வார்டில் போட்டியிட்ட, அ.தி.மு.க., வேட்பாளருடன் கூட்டணி வைத்து, கார்த்திகேயன் தேர்தல் பணி செய்துள்ளார். இதில், இருவரும் வெற்றி பெற, மூன்றாவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட, தி.மு.க., வேட்பாளர் சேகர் தோற்கடிக்கப்பட்டார்.
வெற்றி பெற்ற பின், கார்த்திகேயனும், அ.தி.மு.க., வேட்பாளரும் சேர்ந்து, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தனர். அந்தப் படம், தற்போது, 'வாட்ஸ் ஆப்'பில் பரவி வருகிறது. இதேபோல், வெண்ணந்துார் ஒன்றியம் முழுவதும் ராஜேஷ்குமார் செய்த உள்குத்து வேலையால் தான், தி.மு.க., வேட்பாளர்கள் தோல்வி அடைந்ததாக, கட்சியினர், ஏற்கனவே தலைமைக்கு புகார் அனுப்பினர்.ஆனால், அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, அவருக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கியுள்ளதால், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
ராஜேஷ்குமாரின் கீழ் பணியாற்ற விரும்பாத, வெண்ணந்துார் ஒன்றிய, தி.மு.க., நிர்வாகிகள், 90 சதவீதம் பேர் ஒட்டுமொத்தமாக கட்சி பதவிகளை ராஜினாமா செய்யவும் ஆலோசித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment