கருத்துக்கணிப்புகள் எல்லாம் வெற்றி ஆம் ஆத்மிக்கு என்றே கை காட்டியிருந்தபடியே நடந்திருந்தாலும் ...
அந்த வெற்றி ஒரு 'கேக் வாக்' போல் சாத்தியாமனதன் பின்னணியில் ...
சாதனைகள் பல இருக்கின்றன என்பதை மறுத்துப் பேசுவதற்கில்லை.
200 யூனிட் வரை இலவச மின்சாரம்,
வீடுகளுக்கு 20,000 லிட்டர் இலவச குடிதண்ணீர்,
பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம்,
இலவசக் கல்வி,
மொஹல்லா கிளினிக் திட்டம்,
முதியவர்கள் பராமரிப்புக்கு ரூ.2500
என்று பட்டியலிட நிறைய சாதனைகள் இருக்கின்றன.
டெல்லியில் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சியில் தனியார் பள்ளிகள் 93% வெற்றியைப் பதிவு செய்த நிலையில் ...
அரசுப் பள்ளிகள் 96.2% வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
ஐஐடி நுழைவுத்தேர்வுக்கான இலவசப் பயிற்சி அளித்து அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் ஐஐடியில் இடம் பிடிக்க வழி செய்துள்ளது.
தரமான வகுப்பறை,
20,000 வகுப்பறைகளில் ஏசி வசதி,
சுத்தமான கழிவறை வசதி,
குடிதண்ணீர் வசதி,
திறன்வாய்ந்த ஆசிரியர்கள்
என்ற சிறப்பம்சங்கள் கொண்ட டெல்லி பள்ளிகளை மாதிரியாக
மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று கல்வியாளர்களே பரிந்துரைக்கின்றனர்.
டெல்லியில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 65% ஆக அதிகரித்துள்ளது.
ஆகவே, ஆம் ஆத்மியின் வெற்றியில் கல்வித்தர மேம்பாடு முதலிடத்தில் நிற்கிறது.
அடுத்துவருவது டெல்லி மக்களுக்குச் செலவில்லாமல் மருத்துவ வசதி தரும் ...
சமுதாய ஆரம்ப சுகாதார மையங்களான மொஹல்லா கிளினிக் திட்டம்.
ஒவ்வொரு கிலோ மீட்டர் தூரத்திலும் ஒரு சுகாதார மையம் என்ற இலக்குடன் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம்
முழுமையாக இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றாலும் ...
அவை அமைந்துள்ள இடங்களில் எல்லாம் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ளது.
இத்திட்டம் டெல்லி முழுவதும் விரைவில் செயல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பும் வெற்றிக்கு வித்திட்டுள்ளது.
"ஆம் ஆத்மியின் வெற்றி மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்தால்
தேர்தலில் வெற்றி நிச்சயம் என்பதை உரக்கச் சொல்லியுள்ளது.
இந்த வெற்றி இந்தியாவில் உள்ள எல்லா மாநில முதல்வர்களுக்கும் மிகப்பெரிய பாடம்.
மக்களுக்குத் தேவையற்ற இலவசங்களைக் கொடுக்காமல்
அரசியலில் நேர்மையாக இருந்தால்,
மக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்தால்
தேர்தல் சவால் அல்ல, பூப்பாதையில் ஒரு பயணம்"
என்பதை இந்த வெற்றி ..
உணர்த்துகிறது ...
உணர்த்துகிறது ...
No comments:
Post a Comment