Friday, May 7, 2021

இன்னும் எத்தனை உயிர்கள் இந்த கொரோனாவுக்கு பலியாகப் போகிறது....

 மனம் ரொம்ப பாரமா இருக்கு....இன்னும் எத்தனை உயிர்கள் இந்த கொரோனாவுக்கு பலியாகப் போகிறது....

.....இன்று வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிய நாம் மறுக்கின்றோம் ஆனால் நாளை நம் குடும்பத்துக்கு உள்ளேயே அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டுமென்று என்ற ஒரு நிலைமையை கொண்டு வந்து விடாதீர்கள் .......
பொறுப்புணர்வு இல்லாத சில முட்டாள் மக்களின் கவனக்குறைவால் தொற்று எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது இனியாவது தயவுசெய்து முகக் கவசத்தை அணியுங்கள் ......
முக கவசம் அணியாமல் எவரேனும் இருந்தால் அவரிடம் தைரியமாக நீங்கள் கூறுங்கள் முகக் கவசம் அணிய வேண்டும் என்று சொல்லுங்கள் ....நாம் நினைத்தால் மட்டுமே மாற்றத்தைக் கொண்டுவர முடியும்
சிலர் செய்யும் தவறுக்கு நிறைய நல்லுள்ளங்களுக்கு தொற்று ஏற்பட்டு இருக்கக் கூடிய சூழலை பார்க்கும்போது மனம் வெந்து தவிக்கிறது
தயவு செஞ்சு வெளியில் போறீங்க அப்டின்னா ரொம்ப கவனமா போங்க கட்டாய முகக்கவசம் அணிந்து போங்க நீங்க எவ்வளவோ பெரிய கோடீஸ்வரன் ஆக இருக்கலாம் பிளைட்ல போலாம் & கார்ல எதுல வேணாலும் நீங்க போகலாம் ஆனால் தற்போதைய சூழ்நிலை உங்களுக்கு பாதுகாப்பு அப்படிங்கறது உங்களுடைய முகக்கவசம் மட்டுமே
உங்களுக்கு தொற்று ஏற்பட்டால் மருத்துவமனைகளில் கூட இடம் பற்றாக்குறையாக உள்ளது ....நீங்கள் சுவாசிப்பதற்கு தேவையான ஆக்ஸிஜன் கூட இல்லாத சூழலில் தான் இப்போ இந்த உலகம் இயங்கிட்டு இருக்கு
யாரையும் எப்போதும் குற்றம் சொல்வதற்காக நாம் இங்கே இல்லை
உங்களிடம் பக்கத்தில் இருப்பவர்களை கூட நீங்கள் நம்பாதீர்கள் தயவுசெய்து முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள் கொள்ளுங்கள்
உங்கள் அருகில் இருப்பவர்கள் அவர்களுக்கே தெரியாமல் உங்களுக்கு கொரோனா தொற்றை பரப்புவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது
ஏதேனும் சிறு சிறு உடல் உபாதை ஏற்பட்டால் உடனடியாக பரிசோதனை மேற் கொள்ளுங்கள்
கோவிட் வெளிய சொல்ல அசிங்கப்பட வேண்டிய நோய் எல்லாம் இல்ல,அது ஒரு கிருமி தொற்று அவ்வளவே..
தைரியமா அதை எதிர்கொள்ளுங்க.
ஏதாவது அறிகுறி இருந்தா நாட்கள தள்ளிப்போடாம முதல்லயே சிகிச்சைய ஆரம்பிச்சிருங்க..
தாமதிக்கறதுதான் பெரிய ஆபத்தை விளைவிக்குது.
(நுரையீரலிலுக்கு தொற்று பரவிட்டா கடுமையான அவதிப் படறாங்க)..
உங்களது பக்கத்து வீட்டிலோ உள்ள நெருங்கிய நண்பர்களோ இல்ல குடும்பத்தில் இருப்பவர்கள் யாருக்கேனும்சிறிதாக அறிகுறிகள் தோன்றினால் அவர்கள் பரிசோதிக்க வில்லை என்றாலும் நீங்கள் கட்டாயப்படுத்தியது ஊராட்சி நபர்களுக்கு தெரியப்படுத்தி அவர்களை உடனடியாக பரிசோதனை செய்யச் சொல்லுங்கள்
அவர்கள் அறியாமல் பரிசோதனை மேற்கொள்ளாமல் இருப்பது சுற்றி இருக்கக்கூடிய அத்தனை நபர்களையும் தொற்றுக்கு உள்ளாகும்
ஒரு உயிரை காப்பாற்ற வேண்டுமே தவிர நம்மால் இன்னொரு உயிர்கள் கொல்லப்படக் கூடாது என்பதில் ஒவ்வொரு மக்களும் தீர்மானமாக இருங்கள் அப்போதுதான் உங்கள் மூலம் மற்றவருக்கு பரவுவதை தடுக்க முடியும் ........
தயவுசெய்து என் நட்பு வட்டத்தில் பயணிக்கக்கூடிய அனைவரும் கவனமுடன் விழிப்புடன் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி நடந்து கொள்ளுங்கள் ஒவ்வொரு உயிரும் மிக முக்கியம் ..... நீங்கள் ஆயுள் முழுவதும் என்னுடைய நட்பு வட்டத்தில் பயணிக்க வேண்டும் என்பதே எனது ஆசை எனது ஆசையை தயவுசெய்து ..... நிறைவேற்ற பாடுபடுங்கள்.
May be an image of one or more people and text that says 'TAMIL NADU NADU D DPH Î வெய்து் உங்களை தற்காத்து கொரோனாவிலிருந்து கொள்ள... முகக் கவசம் வெளியில் மற்றும் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும். வாய் மற்றும் மூக்கினை மூடுதல் தும்மும்போதும் இருமும் போதும் கைகுட்டை அல்லது மெல்லிழைத்தாள் (Tissue Paper] உபயோகிக்க வேண்டும். சமூக இடை பொது இடங்களில் மற்ற நபர்களிடமிருந்து குறைந்தது மீட்டர் சமூக இடைவெளியைப் பின்பற்றவும். கை சுத்தம் பேணுதல் வெளியில் சென்று வந்த பின்பும், சாப்பிடுவதற்கு முன்பும் கைகளை சோப்பினால் 40 வினாடிகள் நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். பொதுமக்கள் நலன் கருதி வெளியிடுவோர் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை, சென்னை-6.'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...