Friday, May 7, 2021

'உலக வாழ்வு'... மற்றொன்று 'உள் வாழ்வு.

 'இறைவா ! உன்னையே சதா நினைந்துருகி, உள்ளன்போடு வழிபடும் பக்தர்கள் ஏழ்மையில் உலவுவுதும்... உன்னை அறிந்திடாது, உனக்கு புற முதுகு காட்டி, பொருள் சார்ந்த உலக வாழ்விலேயே வாழ்பவர்கள், சுக வாழ்வில் மூழ்கித் திளைப்பதும்... எவ்வகையான நியாயம்... பிரபு ?'

இந்தக் கேள்விக்கான பதிலை நாமே ஆய்ந்து அறியலாம். இருவகையான வாழ்வு நிலைதான் நமக்கு அளிக்கப் பட்டிருக்கிறது. ஒன்று 'உலக வாழ்வு'... மற்றொன்று 'உள் வாழ்வு.
நமது 'கர்ம வினைகள்' என்ற 'பூர்வ வினைகளின்' இன்ப - துன்ப விளைவுகள், நமது உலக வாழ்வை மட்டுமே பாதிக்கிறது. அவரவரின் 'கர்ம வினைகளுக்கு' ஏற்ப உலக வாழ்வில் 'இன்பம்' என்ற சுகத்தையோ... 'துன்பம்' என்ற துயரத்தையோ அனுபவிப்பது கட்டாயமாகிறது. 'உள் வாழ்வின்' அனுபவமே இல்லாமல் போகிறது.
ஆனால், 'உள் வாழ்வு' என்ற இறைவனை அடையும் பாதையில், இந்த 'கர்ம வினைகளின் விளைவுகளின்' இன்ப - துன்ப பாதிப்புகள் ஏதும் தடையாக இருப்பதில்லை. மாறாக. உள் வாழ்வின் அனுபவத்துடன்... கடமைகள் என்ற உலக வாழ்வின் அனுபவங்களுக் பூர்த்தியாகிறது.
இந்த 'இரட்டைப் பயன்களை' அளிக்கும் ஆன்மீகம் என்ற 'இறை தேடலைத்தான்' 'சனாதன தர்மம்' என்ற புரதான 'தெய்வீக மார்க்கம்' நமக்கு அளிக்கிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...