Wednesday, May 12, 2021

மூன்றாம் பிறை ஸ்பெஷல் !

 

🌙சிவபெருமான் தன் தலையில் மூன்றாம் பிறைச் சந்திரனையே சூடி “சந்திர மௌலீஸ்வரராக” காட்சி தருகின்றார்.
🌙எனவே மூன்றாம் பிறை தரிசனம் வெறும் சந்திர தரிசனம் அல்ல.
🌙சாட்சாத் பரமேஸ்வரனின் ஒரு பகுதியே நாம் தரிசிக்கும் பாக்கியம் பெறுகிறோம்.
🌙 பிறையைப் பார்த்து வணங்குவது என்பது மிக மேலான சிவபுண்ணியம் ஆகும்.
🌙சிவன், பார்வதி, விநாயகப் பெருமான் போன்ற தெய்வங்கள் சூடும் இந்தப் பிறை தெய்வீக சின்னமாகும்.
🌙காமம், வெகுளி, மயக்கம் இந்த மூன்று குணங்களையும் கடந்தவன் முக்தி அடையலாம் என்பதை நினைவுபடுத்துவதற்கே பெரியவர்கள் இதைக் காணவேண்டும் என்று கூறினார்கள்.
பிறையை தொடர்ந்து வணங்குவதால் அளவிட முடியாத புண்ணியத்தை பெறலாம்.
🌜ஒவ்வொரு மூன்றாம் பிறையும் அந்தந்த நாளின் நட்சத்திர,யோக, கரண கால நிலைகளுக்கு ஏற்ப, பல அற்புதமான நல்வரங்களைத் தருகின்றது.🌛
இது......
🌙மனதைச் சுத்திகரிக்கும் தரிசனம்.
🌙மனதால் செய்த பாவங்களுக்கு நல்ல விமோசனம் தரும் தரிசனம்.
🌙குறிப்பாக, வாயால் பேசிய தீய வார்த்தைகளுக்கும், மனதால் பேசிய கொடிய வார்த்தைகளுக்கும், மனதில் உருவாகும், விகாரமான கேவலமான எண்ணங்களுக்கும் தக்க பிராயச் சித்தத்தைத் தரக் கூடிய தரிசனம்.
🌙
சிறுவர்களுக்கு நல்ல ஒழுக்கமான நற்குணத்தைத் தர வல்ல தரிசனம்.
🌙வேத மந்திரங்களை ஓத முடியவில்லையே என்று ஏங்கி வருந்துவோர்க்கு வேத மந்திரப் பலாபலன்களைத் தர வல்ல தரிசனம்.
🌙வெளியில் சொல்ல இயலாதபடி விகாரமான எண்ணங்களில் உழல்வோருக்கு, மனசுத்தியைப் பெற உதவும் பரிகாரங்களைத் தரும் தரிசனம்.
🌙இவ்வாறாக, வானில் சில நிமிடங்களே தோன்றும் மூன்றாம் பிறைச் சந்திர தரிசனம், மனவளப் பலன்களை அபரிமிதமாகத் தர வல்லதாம்.
🌙உண்மையில் மனம் அமுத ஒளி நதியில் புண்ணியமயமாகப் புனித நீராடுவதாகவே, சித்தர்கள், மூன்றாம் பிறைச் சந்திர தரிசனப் பாங்கினைக் குறிக்கின்றனர்.
🌙இன்று முதல் அனைவரும் பிறையை வணங்கும் உயர்ந்த வழக்கத்தை மேற்கொள்வார்களாக!
திருச்சிற்றம்பலம்🌙 *
No photo description available.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...