Thursday, May 13, 2021

ஊரடங்கு நிலை நிலவரம்!

 ₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹

மனித வாழ்க்கையும்..
கருப்பு வெள்ளை தான்..
#மேல்தட்டு மக்கள்:
விதவிதமான உணவு வகைகள்
சமைத்திட வேலையாட்கள்
ஹோம் தியேட்டரில் சினிமா
பொழுதுபோக்கிற்கு ஸ்நூக்கர்
நீச்சல் குளத்தில் குளியல்
வீடே ரிசார்டாய்
அமர்க்களமாக போகிறது
விடுமுறை கொண்டாட்டம்!
#நடுத்தர மேல்தட்டு மக்கள்:
சூப்பர் மார்க்கெட்டில் வாங்கி அடுக்கிய சமையல் பொருட்கள்
யூடியூப் பார்த்து விதவிதமான சமையல்
உணவு சவால் போட்டி
களைகட்டுகிறது புலனத்தில்
இணையத்தில் தரவிறக்கி
புதுப்புது படங்கள் கண்டுகளிப்பு
பொழுதுபோக்கிற்கு
கேரம் , டிரேட்
மொட்டை மாடி நடைபயிற்சி
மாடித் தோட்டம் பராமரிப்பு
அழகாக நகர்கிறது
ஊரடங்கு
#நடுத்தர மக்கள்:
மாததவணை கட்டாமல் ஒத்திவைப்பு
சம்பளம் வருமா வராதா பதைபதைப்பு
மளிகை பொருட்கள் காய்கறிகள்
வாங்க தினமும் ஓட்டம்
விலைவாசி உயர்வால் மனதில் வாட்டம்
வரிசையில் நின்றே ஓயும் கூட்டம்
தொலைகாட்சி முன்பு தஞ்சம்
கடகடவென.....
குறையும் இருப்பு
இருப்பு கொள்ளாமல்
நகரும் திக்.. திக்.. நாட்கள்!
# அடித்தட்டு மக்கள்!
வெளிய போனால்தான் வேலை
வேலைக்கு போனால்தான் சம்பளம்
அன்றாடங்காய்ச்சிக்கு
எப்பவுமே ஜீரோ பாலன்ஸ் தான்
வீட்டு வேலைக்கு வரவேணாமுனு சொல்லிட்டாங்க
ரேசன் அரிசியில பொங்கிக்கிறேன்
குழம்பு வைக்க எங்க போவேன்
வெள்ளம் வந்தப்ப கூட உதவினாங்க
இப்ப ஏன்னு கேட்க நாதியில்ல
புள்ளைங்க பசியால துடிக்குது
அதுங்க நிலைய பாத்து
மனது துடிக்குது
கொரனா வந்து
ஆஸ்பத்திரியில சேர்ந்தவர்களுக்கு
நல்ல சாப்பாடாமே?
*நாங்க பட்டினியில சாகும்முன்னே ஆஸ்பத்திரியில சேர்த்திடுங்கோ!*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...