Tuesday, May 11, 2021

தொழில்துறை மற்றும் வணிகர்களுக்கு சலுகைகள்: தமிழக அரசு அறிவிப்பு.

 கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ள முழு ஊரடங்கை செயல்படுத்துவது குறித்து தொழில் மற்றும் வணிக சங்க அமைப்புகளுடன் நடந்த(மே-9) முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கலந்தாலோசனை கூட்டம் நடந்தது. அதன் அடிப்படையில், முதல்வர் இன்று தொழில்துறை மற்றும் வணிகர்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளார்.



latest tamil news





சலுகைகள் என்ன

* குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு முதலீட்டு மானியம் வழங்க, முதலீட்டு மானியத்திற்கான திட்ட மதிப்பீடு ரூ.280 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 60 சதவீதம்(ரூ.168 கோடி) உடனே விடுவிக்கப்படும்.
* முத்திரைதாள் பதிவு கட்டணம் மார்ச்-31 வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது 2021 டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது.
தொழிற்சாலை பிற பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஒரு நாள் மட்டும் அனுமதி வழங்கப்படும். ஆட்டோ ரிக்ஷா, கால்டாக்ஸி இ.எம்.ஐ கால அவகாசம் நீட்டிப்பு குறித்து ரிசர்வ் வங்கியிடம் வலியுறுத்தப்படும். மேலும் அவைகளுக்கு சாலை வரி கட்டணம் செலுத்த 3 மாத கால அவகாசம் வழங்கப்படும்.


latest tamil news



latest tamil news



latest tamil news



latest tamil news



*காய்கறி, மளிகை கடைகளை போன்று பழ கடைகளும் மதியம் 12 மணி வரை இயங்க அனுமதி.
*மற்ற மருந்து கடைகளை போல நாட்டு மருந்து கடைகளும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ள ஊரடங்கு தளர்வில் மேலும் சில தளர்வுகளையும் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...