Wednesday, May 12, 2021

" வாஜ்பாய் "

 நான் #பாஜக கார்ன் இல்லை...

இருப்பினும் படித்ததை பகிர்ந்து கொள்கிறேன்...
பிரதமராவதற்கும் முன்னர், பாஜக வளரும் பருவத்தில் இருந்தபோது, #வாஜ்பாய் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக சேவையாற்றியபோது, அவரை ஒரு இஸ்லாமியப் பெண் தன் மகளுடன் வந்து சந்தித்தார். தனது மகளுக்கு ஒரு சிறுநீரகம் செயலிழந்துவிட்டதாகவும், மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமானால், மிகுந்த செலவாகுமென்பதால், அதற்கு தங்களால் ஏதேனும் உதவி செய்ய முடியுமா? என ஆதங்கத்தோடு வினவியிருக்கிறார்.
உடனே வாஜ்பாய் அவர்கள் தானே தன் சிறுநீரகத்தைத் தர முன்வந்துள்ளார். அப்போது அரசாங்கத்தின் அதிகாரி, “அய்யா…. அதற்கெல்லாம் மிகப்பெரிய நடைமுறை உள்ளதே. எனவே தங்களால் அது இயலாது.” என மறுதலித்திருக்கிறார். அதற்கு வாஜ்பாய் அவர்களோ, சற்று உறுதியான குரலில், “அதையெல்லாம் நான் பார்த்துகொள்கிறேன். முதலில் என் சிறுநீரகம் பொருந்துமா? என மருத்துவப் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள்” எனக்கூறியுள்ளார்.
அவ்வாறே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
என்ன ஆச்சரியம்!!! வாஜ்பாய் அவர்களின் சிறுநீரகம் ஏகக்கச்சிதமாக பொருந்தும் என மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளது. உடனே நாள் குறிக்கப்பட்டது. தான் வாக்களித்தபடியே வாஜ்பாய் அவர்கள் தனது சிறுநீரகத்தை அந்த இஸ்லாமியப்பெண்ணுக்கு தானமாக அளித்துள்ளார். அப்பெண்ணும் உடல்நலம் தேறியுள்ளார். இது அத்தோடு முடிந்து, மறந்து போயிற்று.
பின்னாளில் ஒரு ஆஸ்பத்திரிவிழாவின் போது, வாஜ்பாய் அவர்கள் முன்னிலையில் ”சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை” செய்த மருத்துவர் திடீரென இதனை தனது பேச்சினூடே குறிப்பிட்டுள்ளார்.
அப்போதுதான் பெரும்பாலானவர்களுக்கு இந்த விவரம் தெரிய வந்துள்ளது.
ஆனால், தன் வாழ்நாளின் இறுதிவரை ஒற்றைச் சிறுநீரகத்துடன் மட்டுமே வாழ்ந்த வாஜ்பாய் அவர்கள் தனது வாயாலோ, தனது எழுத்தாலோ இதனை தெரிவித்ததில்லை.”
இப்போது சொல்லுங்கள்…. நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். சொத்துக்களை அடைவதற்காக பெற்றத் தாயைக்கூட கொல்லத்துணிகிற,
கோடிகோடியாய் கொள்ளையடித்து ஊடகங்களை பணத்தால் அடித்து கையகப்படுத்துகிற,
பதவிக்கு வருவதற்காக எவ்வளவு கீழான நிலைக்கும் இறங்கத்தயாராக இருக்கிற...
ஒருவனுக்கு ஒரு இட்லி கொடுத்தாலே இன்றைய சமூகத்தில், ஃப்ளக்ஸ் வைத்து ஃபோட்டோ காட்டும் இன்றைய அரசியல் வா(வியா)திகளுக்கு மத்தியில்,
இப்படியும் ஒரு மகத்தானவராக வாழ்ந்திருக்கிறார் வாஜ்பாய் அவர்கள். ”தன்னையே கொடுப்பான்” எனும் அடைமொழி இவருக்கல்லவா பொருந்தும்...???
”மக்களால் நான்… மக்களுக்காக நான்…” என முழக்கமிட்டோரும் தன் பெயரில் கோடிகளைச் சேர்த்து, தனது ”வேலைக்காரிக் குடும்பத்தை”யும் குபேரர்களுக்கு இணையாக வாழ்வித்த தாயுள்ளம்(?) கொண்ட தலைமை,
தாங்கள் வாங்கும் கூலிகளுக்காக, தன் இனத்தை, தன் கலாச்சாரத்தை, தன் தன்மானத்தை அடமானம் வைக்கும் தலைமைகள் பல இருக்கும் இந்த தேசத்தில்தான் வாஜ்பாய் போன்றவர்களும் வாழ்ந்திருக்கிறார்!
இவரைப் போன்றோரின் வாழ்க்கை வரலாறு கூட வேண்டாம், இதுபோன்ற சம்பவங்களாவது பள்ளி கல்லூரிப் பாடத்திட்டங்களில் இடம் பெற்றதுண்டா?
இத்தகைய மகத்தானவர் தோற்றுவித்த கட்சியைத்தான் பாரதமண்ணின் மக்கள் மீண்டும் பிரதமராக வந்து விடக் கூடாதென காங்கிரஸின் சோனியா பிரதமராக தவமிருந்து பின் அப்போதைய குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் அவர்களின் நிலைத்த உறுதியால் மண் மோகன்சிங் பிரதமராக வழிவகை செய்தது.
அந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சிதான் அரிசிப்பருப்பையெல்லாம் “ஆன்லைன்” வியாபாரத்தில், யூகபேரத்தில் கொண்டு வந்து, கார்பரேட் கம்பெனிகளுக்கு கைகொடுத்தது.
கறுப்புப்பணம் மட்டுமில்லாமல், அரசாங்கமே டூப்ளிகேட் நோட்டை அடிக்கச் செய்தது.
இன்னும் சொல்லொண்ணா வேதனைகளைத் தந்து பாரதத்தினை படுகுழியில் தள்ளியது.
இஸ்லாமியக் குடும்பம் என பாராமல் தன் உடலின் உறுப்பினை அளித்த வாஜ்பாய்ஜி அவர்களை மதவாதி என முத்திரை குத்தியது.
அவரின் பாஜக விற்கு ”பண்டாரக் கட்சி” என சான்றிதழ் தந்தது.
”பாஜக தேசத்தை மதத்தால் பிரிக்க வழிகோலுகிறது” என வடிகட்டிய பொய்யை மீண்டும் மீண்டும் கூறி, மோசடி செய்கிறது.
இன்று அவர்தம் வழியில், அனைத்து நாடுகளும் வியக்கும்வண்ணம் மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துகிற, தன் குடும்பத்தினை மறந்து,
தேசத்திற்காகவே உழைக்கும் பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களை தேசவிரோத சக்திகள் தரக்குறைவாக வசைபாடுகிறது.
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
May be an image of 1 person and standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...