Wednesday, May 12, 2021

*இறைவனின் கணக்கு*

 எல்லாம்_வல்ல இறைவனிடம் ஒரு கணக்குப் புத்தகம் இருக்கிறது. அதில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு பக்கம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

ஓவ்வொருவருடைய ஒவ்வொரு செய்கையும் அவன் கவனத்திற்கு வராமல் போவதில்லை. செயல்களைச் செய்யும் போதே அவை தானாக அந்தப் பக்கத்தில் பதிவாகி விடும்.
அப்படியொரு கணக்குப் புத்தகம் இருப்பதை பெரும்பாலான மதங்கள் ஒப்புக் கொள்கின்றன.
மனிதன் போடும் கணக்கிற்கும் இறைவன் போடும் கணக்கிற்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உள்ளன. மனிதன் பெரியது என்று நினைக்கும் விஷயங்கள், இறைவன் கணக்கில் மதிப்பில்லாதவையாக குறிக்கப்பட்டு இருப்பதும் உண்டு.
மனிதன்_ஒன்றுமில்லை என்று நினைக்கும் விஷயங்கள் இறைவனின் புத்தகத்தில் தங்க எழுத்துக்களால் பொறிக்கப்படுவதும் உண்டு.
மனிதன் எதையும் பெரும்பாலும் பணத்தால் அளக்கிறான். இறைவன் மனத்தால் அளக்கிறான். மனிதன் ஒன்றிற்கு எவ்வளவு செலவானது என்று பார்த்து மதிப்பிடுகையில் இறைவன் அது எத்தனை ஆத்மார்த்தமாய் செய்யப் பட்டது என்பதை வைத்து மதிப்பிடுகிறான்.
மனிதன் எத்தனை மணி நேரம் பிரார்த்தனையிலும் தியானத்திலும் செலவாகி உள்ளது என்பதை வைத்து தன் இறைபணியை அளக்கையில் இறைவன் அதில் எத்தனை மணித்துளிகள் தன் மீது முழு ஈடுபாட்டுடன் இருந்தது என்பதை மட்டுமே எடுத்துக் கொள்கிறான்.
எனவே
*இறையருளை வேண்டும் நாம் இதுநாள் வரையிலான செயல்களை மறு மதிப்பீடு செய்வோம்*
*நம் கணக்கு இறைவன் கணக்கோடு ஒத்துப் போகுமா? ஒத்துப் போகாது என்றால் இனியாவது நம் அளவுகோல்களை மாற்றிக் கொள்வோம்*
*அப்போது தான் இறைவன் கணக்கையும் நம் ஒப்பிடும் போது நமக்கு ஏமாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்காது*
மகிழ்ச்சிகரமான காலை வணக்கமும்.,
வேண்டுதல்களும்.
🙏🏼🌸🙏🏼🌸🙏🏼🌸🙏🏼🌸🙏🏼

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...