Tuesday, May 11, 2021

உண்மையில் இது அவருக்கு குடுத்த தண்டனை அல்ல.. மக்களுக்கு குடுத்த தண்டனை.

 தஞ்சை வாசிகள் பெரும்பாலானோருக்கு இவரை தெரியாமல் இருக்காது.. ரொம்ப வருடமாக தஞ்சையில் தான் வேலை பார்க்கிறார் என நினைக்கிறேன்.

சும்மா கடமைக்கு என்றில்லாமல் தன் வேலையை சுறுசுறுப்பாக ரசித்து செய்பவர்.. சிலசமயம் சாலையில் ஓடி ஓடி கூட இவர் செய்யும் வாகன ஒழுங்கு மற்றும் செய்கை வெகுளியா தமாசாக இருப்பதாக தோன்றும்.
ஆனா பெரிய கோயில் சிக்னலில் வாகன ஒழுங்கை சீர் செய்வதாக இருக்கட்டும், தெற்கு வீதி ரோட்டில் இடையூறாக நிற்கும் வாகனங்களை விரட்டுவதாக இருக்கட்டும் யாரையும் கடுங்சொல் கூறாமல் கிளம்பு கிளம்பு என்று இவர் செய்வது தனி ரகமாக இருக்கும்.
வெறும் 200 ரூபாய் அபராததற்கு உடனே மாவட்ட துணை செயலாளரே நேரடியாக வந்து சண்டை போட்டது மட்டுமல்லாமல் அன்றே ஆயுத படைக்கு டிரான்ஸ்ஃபர்.
உண்மையில் இது அவருக்கு குடுத்த தண்டனை அல்ல.. மக்களுக்கு குடுத்த தண்டனை.
இதற்கு மேல் ஏதும் சொன்னா நமக்கும் மேலே டிரான்ஸ்ஃபர் குடுப்பாங்க.. எதற்கு வம்பு😜🤦🏻

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...