மக்கள் அலைவது, அழுவது, பிணங்கள் எரிவது.. இதைத்தானே நாள் முழுவதும் நீங்கள் ஒளிபரப்புகிறீர்கள்?
அது மட்டும் போதுமா??
- நோயிலிருந்து மீண்ட, மீட்கப்பட்ட நோயாளிகளின் நேர் காணல்களைக் காட்டுங்கள்!
- ஆக்ஸிஜன் சிலிண்டரை எங்கே தேடுவது என்று எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்!
- பிளாஸ்மா நன்கொடையாளர்களின் தரவுத் தளத்தை உருவாக்குங்கள்!
- எந்த மருத்துவமனையில் எத்தனை படுக்கைகள் காலியாக உள்ளன என்று சொல்லுங்கள்.
- ஆம்புலன்ஸ் சேவை பற்றிய விவரங்களை வழங்குங்கள்.
- எங்கு, என்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பது பற்றிய தகவல்களை வழங்குங்கள்.
- மருத்துவர்களின் பயமுறுத்தும் நேர்காணல்கள் இல்லாமல், பாசிடிவ்வான மருத்துவர்களை எங்கே, எங்கு கண்டுபிடிப்பது என்பது பற்றிய தகவல்களைக் கொடுங்கள்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒருவருக்கொருவர் எங்களால் முடிந்த உதவியைச் செய்வோம்.
நாம் தற்போது போராளிகள்! ஒன்றாக நாம் இணைந்து இந்த போரை எதிர்த்துப் போராடுவோம்.
ஊடகம் என்பது இந்த அவசரக் காலத்தில் செய்ததை மக்கள் மறக்க இயலாதபடி சரித்திரத்தில் காலம் காலத்திற்கு உங்களைப் பற்றி பதிவு செய்ய பாசிடிவ் விஷயங்களுக்காக பாடுபடுங்கள்....
நம்பிக்கையை கொடுங்கள், பீதி கிளப்புவதை குறையுங்கள்..
செய்வீர்கள் என எதிர்பார்க்கும் சாதாரண மக்களின் வேண்டுகோள்..
அன்புடன்
- மக்கள்.
No comments:
Post a Comment