*வாழ்க்கை என்பது ஒரு வித்தியாசமான தேர்வு...!!!*
*அதில் ஓவ்வொருவருக்கும் தனித்தனி கேள்வித்தாள்!!!*
*அதைப்புரிந்து கொள்ள முடியாதவர்கள், அடுத்தவர்களைப் பார்த்து காப்பியடித்து தங்கள் வாழ்க்கையில் தோல்வி யடைகிறார்கள்..!!!*
*மனக்கசப்புகளின் போது மனம் விட்டுப் பேச மட்டும் வாய்ப்பு கிடைத்திருந்தால் உண்மையான உறவுகள் பல பிரிய வாய்ப்பு இருந்திருக்காது.*
*ரத்தத்தினால் பிணைக்கப்பட்ட உறவுகளைக் கூட பிரித்தெடுக்கும் வல்லமை கொண்ட ஒரே ஆயுதம் பணம்...*
*அத்தகையப் பணத்துக்கு பணியாமல் உங்கள் மனதுக்கு பலம் சேர்க்கும் உறவுகளை சம்பாதியுங்கள்... அதுவே உங்களின் உண்மையான சொத்தாகும்...*
*புரிதல் இல்லாத வாழ்வும்…*
*புரிதல் இல்லாத நட்பும்… புரிதல் இல்லாத உறவும்…*
*புரிதல் இல்லாத அறிவும்…*
*நிலை பெறுவதில்லை..!புரிதல் நன்று…*
*அறிவை செயல்படுத்தினாலே புரிதலை பெற முடியும்..!*
*கடந்துபோன நாட்கள் எப்படியோ... இனி வரும் நாட்கள் நிச்சயம் அழகானவை என்ற நம்பிக்கையோடு வாழ்ந்து பார்க்கலாமே....*
*ஒரு மகிழ்வான எதிர்பார்ப்போடு கடக்கும்போது எந்த பாதையும் முள்ளாக தைப்பதில்லை, பாரத்தை கொடுப்பதில்லை...*
*இன்றோ நாளையோ மாற்றங்கள் வரலாம், சூழ்நிலைகள் மாறலாம்....*
*இன்றைய வேதனை அப்படியே நம்மோடு கடைசிவரை வந்துவிடாது... அது சென்று விடும்... நிச்சயம் யாருக்குமே ஒருநாள் விடியும்... அதனை ஆவலோடு எதிர்கொண்டு அறிந்துகொண்டு அழகாக வாழலாமே....*
*சிந்தனைகளும், ஆலோசனைகளும் ஆயிரம் வாய்ப்புகளை உருவாக்கக்கூடும்...*
*ஆனால், நம்பிக்கை ஒன்றுதான் அந்த இலக்குவரை அழைத்துச்செல்லும்...*
*நமக்கு வாழ்வில் தோன்றும் பிரச்சனைகள் உண்மையில் பிரச்சினைகளே அல்ல...*
*நாம அவற்றை எதிர்கொள்ளும் விதம் தான் உண்மையில் பெரிய பிரச்சினையாகி விடுகிறது...*
*சிந்தித்து செயலாற்றுங்கள்...*
*
வாழ்த்துக்கள்
...**வாழ்க_வளத்துடன்!...*
*உங்களில்

ஒருவன்*
No comments:
Post a Comment