சரியை
கிரியை
யோகம்
ஞானம்
என்பன சாதனங்களாக உள்ளன.
சரியை என்றால் உடலால் தொண்டு செய்தல். அதாவது உழவாரம் மற்றும் திருப்பணிகள் செய்வது.
கிரியையாவது உடலும் உயிரும் இணைந்து தொண்டு செய்தல்.
பூசனை, வழிபாடு முதலியன.
யோகம் என்பது சரியை, கிரியைகளால் உயிருக்கு கிடைத்த அனுபவத்தில் ஒன்றி (அழுந்தி) நிற்றல்.
ஞானமாவது அறிவொளியாகத் திகழும் இறைவன் வேறு, தான் வேறு என்று இல்லாமல் இரண்டற கலந்து நிற்கும் சுத்தாத்துவிதநிலை.
இந்நான்கும் சாதனை நிலையில் வேறே தவிரப் பொருள் நிலையில் ஒன்றே.
இதனை தாயுமானவர் சுவாமிகள் தெளிவாக நமக்கு புரியும் வண்ணம் கூறுகிறார்.
"விரும்பும் சரியை முதல் மெய்ஞானம் நான்கும்
அரும்பு மலர் காய் கனி போல் அன்றோ பராபரமே"
என்பது அவர் வாக்கு.
தருமை 26 ஆவது குருமணிகள் அருளிய
No comments:
Post a Comment