வணக்கம்
வணிகவரித்துறையின் ஆணையரின் ஆணைப்படி அனைத்து வணிகவரி வட்ட ஆய்வாளர்களும் 01.07.2021 முதல் களத்தில் இறங்கி இதுவரை ஜி எஸ் டி பதிவுபெற்று தொழில் செய்யும் அனைத்து வணிகர்களையும் அடையாளப்படுத்தப்படவிருக்கிறார்கள்..
Category I
இதில் முதல்வகையானது, பதிவெண் முகவரியில் முறையாக தொழில் செய்பவர்கள்
Category II
இரண்டாம் வகையானது, வியாபார வளாகத்தினை ஆய்வுசெய்யும்போது தொழில் புரியும் வணிகர் அல்லது அவரது தொழில் நடைமுறையில் மேல் ஏற்படும் சந்தேகத்தின் பேரில் வகைப்படுத்தப்படும்
Category III
அலுவலர் ஆய்வு செய்யும்போது பதிவுபெற்ற முகவரியில் தொழில் நடக்காதபோது அதனை மூன்றாம் வகையாக பிரிக்கப்படுகிறது.
வியாபார நண்பர்கள் அனைவரும் கவனிக்கவேண்டியது
1.தங்களுடைய வியாபார ஸ்தலங்களில் பெயர்ப்பலகை வைத்து இருக்க வேண்டும். பெயர்ப்பலகையில் GST number இருக்கவேண்டும்.
2.காம்போசிஷன் டீலர் என்றால், பெயர்பலகையில் “ Composition Dealer” என்று குறிப்பிட்டிருக்கவேண்டும்
3.உங்களுடைய GST பதிவு சான்றிதழ் கடையில் அல்லது அலுவலகத்தில் அனைவருக்கும் தெரியும் வகையில் மாட்டி வைக்க வேண்டும்.
3.அதிகாரிகள் கடைக்கு வந்தால் அவர்கள் கேட்கும் விபரங்களை தெளிவாக சொல்ல வேண்டும்.
வியாபார நிறுவனம் சரியான முகவரியில் நடைபெறுகின்றது என்பதை உறுதிசெய்ய இந்த தணிக்கை நடைபெறுகின்றது.
இது தங்கள் அனைவரின் கவனத்திற்கு .
நன்றி!!!
No comments:
Post a Comment