ஸ்வாமி !! ஐந்து நிமிடங்கள் தான் இருக்கு
ஆபிஸிலிருந்து கிளம்ப அதுக்குள்ள பகவத் கீதையை சொல்ல முடியுமா ?
அடியேன் ஓ இன்னும் ஐந்து நிமிடம் இருக்கா? நமக்கு இரண்டே நிமிடம் போதுமே கீதையை சொல்லிவிட என்று கூறி பகவத் கீதை என்பது ஒன்றுமில்லை
விடு - பிடி அல்லது பிடி - விடு அவ்வளவுதான் என்று சொன்னதும்
கேட்டவர் ஒரு கோபமான பார்வையுடன் ஒன்றும் புரியாமல் அமைதியாக இருந்தார்
பிறகு விளக்கியபோது உணர்ந்தார்
அடியேன் விடு பிடி என்றால்
இந்த உலக பந்தங்களையெல்லாம் உதறித் தள்ளிவிடு அதேநேரம் பரந்தாமன் பாதங்களைப் இறுக பிடித்துக்கொள் அல்லது இறுக
பற்றிக்கொள் என்று அர்த்தம்
ஆனால் நம்மை போன்ற சாமான்ய மக்களுக்கு இந்த உலக பந்தங்களை எல்லாம் உதறித் தள்ளுவது சுலபத்தில் முடிகின்ற காரியமில்லை
பிறகு எவ்வாறு பரந்தாமன் பாதங்களைப் இறுக பற்றுவது
அப்படியானால் கவலை வேண்டாம். இன்னொரு வழி இருக்கின்றது
அது தான் அடியேன் சொன்ன இன்னொன்று அதாவது
பிடி விடு
என்ன ஓய் குழப்புகிறீர்
குழப்பம் ஒன்றும் இல்லை
பிடி என்றால் முதலில் பரந்தாமன் பாதங்களைப் பிடி அல்லது பற்று
அந்த பிடி இறுக இறுக இந்த உலக பந்தங்களின் மேல் உங்களுக்குள்ள பிடிப்பு தானாக தளர்ந்துவிடும்
அது எப்படி பற்று தானாக விலகும்
சரி உமக்கிப்போ ஒரு உபமானம் சொல்லுகிறேன் கேளும்
ஹோமத்துக்கான சில சமித்து குச்சிகள் ஒரு கயிற்றால் இறுக்கமாகக் கட்டப்பட்டுள்ளன
அதனை அவிழ்க்க முடியவில்லை (இது நம்முடைய உலக பாசபந்தம் )
வேறு ஒரு கயிறு எடுத்து அதற்குப் பக்கத்திலேயே அதைவிட இறுக்ககட்டி ஒரு குலுக்கு குலுக்கி இறுக்கினால் (இந்த புதிய கட்டு என்பது பகவானின் பாதத்தை பற்றிய நம் உறுதியான பிடிப்பு) புதிய கயிற்றின் இறுக்கத்தில் பழைய கயிற்று இறுக்கம் தானாக தளர்ந்து கழன்று விடும்
அது போல நாம் பகவான் மீதான நம் பற்றை இறுக்கிகொண்டே சென்றால் உலக பற்று என்பது நம்மைவிட்டு தன்னாலே விலகி விடும்
உலக பந்தங்களை விட்டு பரந்தாமன் பாதங்களைப் பற்றுவது ஞானிகளின் ஞான மார்கம்
பரந்தாமன் பாதங்களைப் முதலில் பற்றி தானாக உலக பந்தங்களை விட்டு விடுவது பக்தி மார்கம் அதாவது சாமானிய மக்களான நமக்கானது
இவ்வளவு தான் கீதையின் தத்துவம்.
இன்றைய நாள் இனியதாக ஆனந்தமாக ஆரோக்யமாக அமைதியாயக அமோகமாக அமைய
வாழ்த்துகள்
.
Classic உதாரணம், ஐயா! இதை விட எளிமையாக கீதாசாரத்தை விளக்க முடியுமா எனத் தெரியவில்லை... கீதையின் Sarva Dharmaan parityajya -வையும், பற்றுக பற்றற்றான்...என்ற குறளையும் இவ்வளவு அருமையாக Blend செய்தமைக்கு, Really, HATS OFF, sir...
ReplyDelete