Saturday, June 26, 2021

ஹெலன் கெல்லர்:

 ஒன்றரை வயதில் ஏற்பட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பார்வைத்திறன், பேசும்திறன், கேட்கும்திறனை இழந்தாலும், சாதனை படைக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டிய ஹெலன் கெல்லர் 1880ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் பிறந்தார்.


👉 இவர் ஆனி சலிவன் (யுnநெ ளுரடடiஎயn) ஆசிரியை உதவியுடன் பத்து வயதுக்குள் பிரெய்லி முறையில் ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், கிரேக்கம், லத்தீன் மொழிகளைக் கற்றார். தனது கல்லூரி நாட்களிலேயே 1903ஆம் ஆண்டு தி ஸ்டோரி ஆஃப் மை லைப் என்ற தலைப்பில் தனது சுயசரிதையை எழுதினார்.


👉 மேலும் இவருடைய சுயசரிதை தமிழ் உட்பட உலகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டது. இதை தவிர, 12 நூல்கள் எழுதியுள்ளார். பார்வையின்றி, காதுகேளாமல் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்றார். இவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட தி மிராக்கிள் ஒர்க்கர் (வுhந ஆசையஉடந றுழசமநச) திரைப்படம் ஆஸ்கார் விருதை பெற்றது.


👉 வாழ்நாள் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அயராமல் பாடுபட்ட ஹெலன் கெல்லர் 1968ஆம் ஆண்டு மறைந்தார்.அகிலன்


✍ தமிழில் முதல் ஞானபீட விருது பெற்ற அகிலன் 1922ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் பெருங்கள ரில் பிறந்தார். இவரது இயற்பெயர் பி.வி.அகிலாண்டம்.


✍ சுதந்திரப் போராட்ட வீரர், புகழ்பெற்ற புதின ஆசிரியர், நாடகாசிரியர், சிறுவர் நூலாசிரியர், மொழிப்பெயர்ப்பாளர், கட்டுரையாளர் என இவருக்கு பல முகங்கள் உண்டு.


✍ வேங்கையின் மைந்தன் என்ற நாவல் 1963ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதையும், சித்திரப்பாவை 1975ஆம் ஆண்டு ஞானபீட விருதையும் பெற்றன. இவரின் பல படைப்புகள் தமிழக அரசு விருதுகளைப் பெற்றுள்ளன.


✍ தமிழ் இலக்கியத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கிய அகிலன், 1988ஆம் ஆண்டு மறைந்தார்.முக்கிய நிகழ்வுகள்

👉 2007ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த கர்நாடக இசைக்கலைஞரான டி.எம்.தியாகராஜன் மறைந்தார்.👉 1998ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது.👉 1838ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி வந்தே மாதரம் பாடலை இயற்றிய பங்கிம் சந்திர சட்டர்ஜி பிறந்தார்.👉 1859ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி ஹேப்பி பர்த் டே டூ யூ பாடலை இயற்றிய மில்ட்ரெட் ஜே.ஹில் அமெரிக்காவில் பிறந்தார்.💐💐💐

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...