ஓரிரு நாட்களாக போலிஸ் டிஜிபி, நீதிபதிகள் கேரக்டரில் சில உபிகள் சுற்றுவதை பார்த்திருக்கலாம். 'அவனை தூக்கு, இவனைப் புடி, அந்த மாஜி அமைச்சர் ஜெயிலுக்குப் போகப் போறாரு, இந்த எம்.எல்.ஏவுக்கு ஸ்கெட் போட்டாச்சு' என்பது போன்ற சிரிப்பு வராத எஸ்.வி.சேகர் காமெடி போல காமெடி பண்ணுவதை பார்த்திருக்கலாம்.
அவர்கள் பத்து ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் செய்திகளை பார்க்க ஆரம்பித்திருக்கின்றனர். அதனால் இதுபோல 'யுரேக்கா' பாணி கண்டுபிடிப்புகள் அவர்களிடம் இருப்பதில் வியப்பில்லை.
தற்போதுள்ள தமிழக சட்டசபையில் உள்ள 234 எம்.எல்.ஏ-க்களில் 134 பேர்மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. 10 எம்.எல்.ஏ-க்களின்(8 திமுக, 2 காங்கிரஸ்) விபரங்கள் தெளிவாக இல்லையென்பதால் அவர்களை தவிர்த்து மீதமுள்ள 224 பேரில் 134 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளது.
கட்சிவாரியாக கிரிமினல் குற்ற வழக்குகள் கொண்ட
எம்.எல்.ஏ-க்களின் பட்டியல் :
தி.மு.க - 96 எம்.எல்.ஏ-க்கள்,
அ.தி.மு.க - 15 எம்.எல்.ஏ-க்கள்,
காங்கிரஸ் - 12 எம்.எல்.ஏ-க்கள்,
பாமக - 4 எம்.எல்.ஏக்கள்
விசிக - 3 எம்.எல்.ஏக்கள்
பா.ஜ.க - 2 எம்.எல்.ஏ-க்கள்
57 எம்.எல்.ஏ-க்கள் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட #தீவிர_கிரிமினல் வழக்குகள் உள்ளது.
தி.மு.க - 39 பேர்
காங்கிரஸ் - 6 பேர்
அதிமுக - 5 பேர்
பாமக - 3 பேர்
பாஜக - 2 பேர்
இந்திய கம்யூனிஸ்ட் - 1 நபர்
விடுதலை சிறுத்தைகள் - 1 நபர்
ஸ்டாலின் அமைச்சரவையில் உள்ள 34 அமைச்சர்களில் 28 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளது. அதில் பல வழக்குகள் MP, MLAக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. செந்தில் பாலாஜி மீதான லஞ்ச, ஊழல் வழக்குகள், மா.சுப்பிரமணியன் மீதான நில அபகரிப்பு வழக்குகள், பொன்முடி மீதான செம்மண் திருட்டு வழக்கு, சொத்துக்குவிப்பு வழக்குகள், நேரு மீதான நில அபகரிப்பு வழக்குகள், ஐ.பி, அனிதா ராதா கிருஷ்ணன், எ.வ வேலு போன்றோர் மீதான சொத்துக்குவிப்பு போன்ற வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன.
பத்தாண்டுகளாக நடந்துவரும் இந்த வழக்குகளுக்கே இன்னும் தீர்ப்பு வரவில்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.
இந்த விபரங்களை ஏ.டி.ஆர் அமைப்பு வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment