ஸ்டாலின் வேண்டுமானால் 86 + 9 = 97 என்று சொல்லிக்கொண்டிருக்கலாம்!
ஆனால் நிஜத்தில் ?!
ஒன்றுமட்டும் புரியவில்லை!!
இந்திய அரசை,
மத்திய அரசு என்று அழைப்பதா? அல்லது
ஒன்றிய அரசு என்று அழைப்பதா?
என்கிற விவகாரம்தான் இன்றைய
தலைபோகிற பிரச்சினையா?! அதுவும் இந்த உலகளாவிய கொரோனா பெருந்தொற்று காலத்தில் இது ரொம்பவும்
அவசியமா?!
திமுக தனது தேர்தல் அறிக்கையிலோ, பிரச்சாரத்திலோ இந்தமாதிரி நம்
பாரதநாட்டு அரசின் பெயரை, அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மாற்றிதான் அழைப்போம் என்று வாக்குறுதி ஏதேனும்
கொடுத்திருந்ததா? எனக்கு இப்படி கூறி ஓட்டு கேட்டதாக ஞாபகமில்லை. நினைவில் வைத்தவர்கள் இருந்தால்
கூறுங்கள்.
இன்றைய தேதிக்கு தமிழகத்தில் பாலாறும் தேனாறும் ஓடிக் கொண்டிருக்கிறதா?
தமிழக கஜானா நிரம்பி வழிகிறதா? தமிழகம் உலக வங்கியின் கடனை அடைத்து, அதன் மிதமிஞ்சிய நிதியை
மூலதனத்தில் பங்களிப்பு செய்யும் நிலைக்கு வந்துவிட்டதா?
கொரோனா அபாயாத்தை 100% கடந்து வந்துவிட்டதா? டாஸ்மாக்கை மொத்தமாக மூடிவிட்டு பட்ஜெட் போடும்
நிலையில் உள்ளதா?
மக்கள் இலவசத்திற்கு அலையாத நிலை வந்துவிட்டதா? விவசாயம் மற்ற பிற வளர்ச்சி பணிகள் முழுமை பெற்று
விட்டனவா? அனைத்து மக்களுக்கும் சுபிட்சமான வாழ்க்கை கிடைத்துவிட்டதா?
அரசு நடத்தும் ஆஸ்பத்திரிகள், பள்ளிகள், போக்குவரத்து உட்பட மற்ற பிற நிர்வாகங்கள் அனைத்தும் சீர்கேட்டில்
உள்ளன. தொடர் மின்வெட்டு ஆரம்பத்திற்கு, அப்பாவி அணில்கள் பலிகடா ஆக்கப்படும் நிலை வந்துவிட்டது!!
ஒரு ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் கட்சி தான் அமைக்கும் புதிய அரசின் மூலம் நிர்வாகத்தை திறம்பட நடத்தி, தன்னை
வெற்றி பெற வைத்த மாநிலத்திற்கு நன்மையும் செய்யலாம். அல்லது தனக்கு முன் இருந்த ஆட்சியாளர்கள்
நிர்வாகத்தை கெடுத்து வைத்துவிட்டு சென்றுவிட்டார்கள் என்று அடுத்தவர்கள் மீது பழியை போட்டுவிட்டு
தன்னுடைய நிர்வாகத் திறமையின்மையையும் காட்டலாம். (அமைச்சர் செந்தில்பாலாஜி, மின் கம்பியை ஒட்டிய மரம்,
செடிகளை முந்தைய ஆட்சியாளர்கள் கழித்து விடவில்லை அதனால் அதில் ஓடும் அணில்களால் ------- என்று
கூறுவது போன்று.)
அந்த வகையில்தான் வருகிறதா இதுவும்? திமுக தன் ஆட்சியின் நிர்வாக திறமையின்மையை மக்கள்
கவனிக்காமல் இருக்கும் வகையில் வைத்திருக்க, "மத்திய அரசை" பார்த்து இதுபோன்று வார்த்தைக்கு வார்த்தை
"ஒன்றிய அரசு" என்று அழைக்கும் புதிய நடைமுறையும்??
ஆனால் ஒன்று
No comments:
Post a Comment