அடங்காத யானையா என்பதை விட, முதலில் திமுக என்பது ஒரு யானையா என்றால் 1972 க்குப் பிறகு இல்லை என்பது தான் சரியானது.
அண்ணாதிமுக பிறந்த 1972 க்குப் பிறகு நடந்த 10 சட்டமன்ற பொதுத்தேர்தலில் வெறும் மூன்றே முறை தான் வென்றிருக்கிறது. அதுவும் 1989 இல் இலை பங்கேற்கவில்லை, 2006 இல் மைனாரிட்டி ஆட்சி, சோ, சரிக்கு சரியாய் அதிமுக Vs திமுக என்ற களத்தில் 10க்கு 1 ல் தான் வென்றிருக்கிறது திமுக.
இது தான் அடங்காத யானையின் பொருளா? அல்லது அந்தப் பதத்திற்கு பொருத்தமான கட்சியா திமுக என்றால் நிச்சயமாக இல்லை தான் ஓட்டுக்களின் அடிப்படையில்.
சரி, ஓட்டரசியலில் தான் யானை பலம் இல்லையே என்றாலும் மக்கள் போராட்டத்திலோ கொள்கையில் துணிந்து நிற்பதிலோ, மற்ற தேசிய கட்சிகளை மிரட்டும் தொணியிலாவுது யானை யா திமுக என்றால் அதுவுமில்லை.
கேவலம் அரசியலுக்குக்காக கட்டிய மனைவியை பைத்தியம்ன்னு சொல்லி விசாரணையில் இருந்து விலக்கு கேட்ட கேடுகெட்ட அயோக்கிய கட்சி திமுக தானே..?
கேவலம் ப. சிதம்பரத்தின் ரெய்டுக்குலாம் பயந்து தரை தளம் ரெய்டு என கழுத்தில் கத்தி வைக்க, முதல் தளத்தில் 63 சீட்டுக்களை வாரி வழங்கிய பாரி வள்ளல் திமுக என்கிற கட்சி தானே..? அடங்காத யானை எனில் 25 சீட்டு தான் தருவேன்னு தோளுயர்த்தி இருந்தால் குறைந்தபட்சம் கட்சியின் மானமாவுது காப்பாற்றப் பட்டிருக்கும்.
கேரளாவுக்கு எதிராக முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கண்டப் ஆர்ப்பாட்டம்ன்னு திமுக அறிவித்ததும், டெல்லியில் இருந்து ஃபோன் வந்ததும், கண்டனம் மறைந்து பொதுக்கூட்டமாகி, பின்பு கூட்டமாகி பின்பு கருத்தரங்கமாகி, கடைசியில் ரத்தே செய்து காட்டிய காகித யானை திமுக என்கிற கட்சி தானே?
தமிழ் ஈழம் தக்காளி கோலம்ன்னு கண்டத பேசிய திமுகவின் TESO அமைப்பின் தீர்மானத்தில் இனப்படுகொலை என்கிற வார்த்தையக் கூட சேர்க்கப் பயந்த தொடை நடுங்கிக் கட்சி எது..? திமுக தானே? அதன் தலைவர் கருணாநிதி தானே?
இதெல்லாம் வரலாறா இல்லியா? நடந்ததா இல்லியா..?
தமிழ்மண்ணின் ஒரு பகுதி கட்சத்தீவு கபளீகரம் செய்யப்போட்டது கைகட்டி வாய்ப்பொத்தி கடைந்தெடுத்த அடிமையாய் இருந்த அட்டைக் கத்தி அசகாய சூரன் யார்? கருணாநிதி தானே? கருணாநிதி திமுகவுக்கு தலைவர் தானே?
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டுமென அச்சமற்று சொல்ல இயலாமல் 7 ஆண்டுகள் சொக்கத்தங்கம் சோனியாவிற்கு பாத பூஜை நடத்தி அரசியல் நடத்திய அசிங்கம் பிடித்த அயோக்கிய கட்சி எது? திமுக தானே? மறக்கக் கூடியதா இதெல்லாம்? அல்லது மறந்து விடுதல் நலமா..?
நிரூபிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் பார்த்தால் திமுக என்பது யானையுமில்லை. வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையில் பார்த்தால் அந்த ஜென்மம் அடங்காமல் சுற்றித் திரிந்து தமிழகத்திற்கு பயன்பட்டதாக தரவுகளுமில்லை.
திமுக என்பது,
புலித் தோல் போர்த்திய பூனை,
ஓங்கி அடித்தால்,
'மியாவ்' எனக் கத்தும் புதுவகை யானை..!
No comments:
Post a Comment