Thursday, June 24, 2021

.சித்தாந்தத்துக்கு என்றும் அழிவில்லை..

 ஆந்திர மாநிலத்திலிருந்து #தெலுங்கானாவைப் பிரித்து தனி மாநிலம் அமைப்பது என காங்கிரஸ் தலைமையிலான அன்றைய மத்திய அரசு முடிவு செய்தபோது ஆந்திர மாநில அரசியல்வாதிகள் மிகக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தார்கள்...! ஆறு மாத காலம் ஒட்டுமொத்த ஆந்திராவையும் முடக்கினர் ... ஆனால் எதையும் தடுக்க முடியவில்லை...குறிப்பிட்ட நாளில் தெலுங்கானா மாநிலம் உதயமானது..

அதேபோல , நாளை தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களைப் பிரித்து , தனி கொங்கு மாநிலம் அமைப்பது என மத்திய அரசு முடிவு செய்து விட்டால் , இந்த குன்றிய முதல்வர் வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும் ...வேண்டுமானால் அன்றைய ஆந்திர மாநில அரசியல்வாதிகளைப் போல சில காலம் ஆகாத்தியம் செய்து பார்க்கலாம்...
நாடாளுமன்றத்தில் தனி கொங்கு மாநிலத்திற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு , அதன் மீதான மத்திய அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி கையெழுத்திட்டு விட்டால் , குறிப்பிட்ட நாளில் தனி கொங்கு மாநிலம் உதயமாகியே தீரும்..
இதுதான் மத்திய அரசின் பலம் ...இங்கு மத்திய அரசு நினைத்தால் எந்த மாநிலத்தின் எல்லையையும் மாற்றியமைக்கலாம் ....மாநில அரசுகளால் ஒன்றும் செய்ய முடியாது ....
மாநிலங்கள் நினைத்தால் பிரிந்து செல்லலாம் என்பதெல்லாம் கழகர்களின் wet dream ....தம்மாத்தூண்டு இலங்கையை பிரிக்க நினைத்ததற்கே பிரபாகரனை மண்டையைப்பிளந்து மல்லாக்கப்படுக்கவைத்துவிட்டார்கள்....பிரிவினைவாதத்தால் லட்சக்கணக்கான அப்பாவித்தமிழர்கள் பலியானதுதான் மிச்சம் ...பாரதம் பிராந்திய வல்லரசு என்பது நினைவிருக்கட்டும்...அண்டை நாட்டின் உதவியுடன் ஆயுதமேந்திப் போராடிய காஷ்மீரிகளையே ஒடுக்கிய மத்திய அரசுக்கு , இந்த காகிதப்புலிகள் ஒரு பிடிக்குக் காண மாட்டார்கள்...
சீன கம்யூனிச கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் படுதோல்வி , ஊரடங்கு அமல் படுத்துவதில் ஓரவஞ்சனை , தடுப்பூசி போடுவதில் குளறுபடி , மின் வினியோகத்தில் சொதப்பல் , 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தலையெடுக்கும் மின்வெட்டு என இந்தக் குறுகிய காலத்தில் இந்த அரசு நிர்வாக ரீதியாக அடைந்த படுதோல்விகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக குன்றிய முதல்வரும் அவரது அல்லக்கைகளும் இந்த வார்த்தை விளையாட்டில் இறங்கியிருக்கிறார்கள்...
நீங்கள் ஒன்றியம் என அழைத்தாலும் சரி...அல்லக்கை ஊடகங்களின் தயவால் தன்னை ஒரு சிற்றரசராக கற்பனை செய்துகொண்டாலும் சரி... இங்கு மத்திய அரசுதான் பாஸ்...
பத்துப்பைசா பிரயோஜனமற்ற இதுபோன்ற வார்த்தை விளையாட்டுகளை விட்டுவிட்டு , தேர்ந்தெடுத்த மக்களுக்கு ஏதாவது உருப்படியாக செய்யப் பாருங்கள்...
அனாதி காலமாக நீடித்திருப்பது இந்த பாரத தேசம்....உங்கள் ஆட்சிக்காலம் வெறும் ஐந்து வருடம் மட்டுமே...! 😏😏
நினைவிருக்கட்டும்...!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...