இராகு-குளிகை-எமகண்டம் முதலிய காலங்கள்!
இராவணனின் மனைவி மண்டோதரி, கருவுற்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். எந்நேரமும் பிரசவம் ஆகலாம் என்ற நிலையில், இராவணன் தனது குலகுருவான சுக்ராச்சாரியாரை சந்தித்து,
"யாராலும் வெல்ல முடியாத வீரமும், மிகுந்த அழகும், நிறைந்த அறிவும் கொண்ட மகனே தனக்குப் பிறக்க வேண்டும் என்று வேண்டினான்!
அதற்கு சுக்ராச்சாரியார் *கிரஹங்கள் அனைத்தும் ஒரே கட்டத்தில் இருக்கும் நேரத்தில் உனக்குப் பிள்ளை பிறந்தால், நீ விரும்பிய எல்லா சிறப்புகளையும் கொண்ட மகன் பிறப்பான் என்றார்!*
உடனடியாக, நவக்ரஹங்கள் அனைத்தையும் சிறைப்பிடித்து, ஒரே அறைக்குள் அடைத்து விட்டான் இராவணன். தாங்கள் அனைவரும் ஒரே இடத்தில் இருப்பதால் நடக்கப்போகும் தீமைகளை எண்ணி கவலை கொண்டனர்.
இது குறித்து சுக்ராச்சாரியாரிடம் ஆலோசனை கேட்டனர். "இந்த சிக்கலில் இருந்து விடுபட, உங்கள் ஒன்பது பேரைத் தவிர, நல்ல செயல் புரியவென்றே இன்னொரு புதியவன் ஒருவனை சிருஷ்டித்து, ஒவ்வொரு நாளிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை அவனுடைய ஆளுகைக்கு உட்பட்ட நேரமாக மாற்றிக் கொடுத்தால், நன்மை உண்டாகும்;
அவனை சிருஷ்டிக்கும் அதே வேளையிலேயே மண்டோதரிக்கு சுகப்பிரசவம் உண்டாகும்;
நீங்களும் சிறையில் இருந்து விடுபடலாம்"
என்றார்!
*சுக்ராச்சாரியாரின் வாக்கின்படி, சனீஸ்வரன் சிறையில் இருந்தபடியே தனது சக்தியால், தனது மனைவி ஜேஷ்டாதேவிக்கு ஒரு மகன் பிறக்கும்படி செய்தார். அவனுக்கு "குளிகன்" என்று பெயரிடப்பட்டது.*
குளிகன் பிறந்த அதே நேரம் மண்டோதரிக்கு ஒரு அழகான மகன் பிறந்தான்.
குழந்தை பிறந்து முதன்முதலில் அழுதவுடன், ஒரு மாபெரும் வீரன் பிறந்துள்ளான் என்பதை குறிக்கும் வகையில் இடி-மின்றலுடன் அடர்மழை பெய்தது. அதனால் *மேகநாதன்* என்று பெயரிட்டான்!
பின்னாளில் கடுந்தவம் புரிந்து, பிரம்மாவிடம் இருந்து பல அபூர்வமான அஸ்திரங்களைப் பெற்று, இந்திரனையே வென்றதால் *இந்திரஜித்* என்று அழைக்கப்பட்டான்!
*குளிகை நேரம் என்றே ததினமும் பகலிலும், இரவிலும் ஒரு நேரம் குளிகனுக்காக வழங்கப்பட்டது.*
*குளிகை நேரத்தை*
*"காரிய விருத்தி நேரம்" என்று ஆசிர்வதித்தார் சுக்ராச்சாரியார்!*
No comments:
Post a Comment