தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் அடிக்கடி சின்ன சின்ன மின்வெட்டு நடப்பதற்கு என்ன காரணம் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பல்வேறு விஷயங்களை பட்டியலிட்டு இருந்தார். இதில் அணில்கள் குறித்து செந்தில்பாலாஜி குறிப்பிட்ட விஷயம் வைரலாகி வருகின்றது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக சில ஊர்களில் அவ்வப்போது 5 நிமிடம், 10 நிமிடம் என்று மின்சார தடை ஏற்படுகிறது. சில மாவட்டங்களில் மின் தடை பிரச்சனை சரி செய்யப்பட்டுவிட்ட நிலையில், இன்னொரு சில மாவட்டங்களில் இந்த பிரச்சனை தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஏற்படும் இந்த சிறிய அளவிலான மின்தடைக்கு என்ன காரணம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
விளக்கம்
அமைச்சர் அளித்துள்ள விளக்கத்தில், மின்வெட்டு பிரச்சனையை செய்து வருகிறோம். கடந்த டிசம்பருக்கு பின் முந்தைய அரசு பராமரிப்பு பணிகளை செய்யவில்லை. மரங்கள், செடிகளை அகற்றவில்லை. தேர்தலை மனதில் வைத்து பராமரிப்பு பணிகளை செய்யவில்லை. இதனால் பல இடங்களில் மின் கம்பிகள் இருக்கும் இடங்களில் மரங்கள் வளர்ந்து உள்ளன. கிளைகள் இந்த கம்பிகளுக்கு இடையே செல்வதால் அவ்வப்போது கம்பிகள் உரசி மின்தடை ஏற்படுகிறது. அதேபோல் அணில்கள் இந்த கிளைகளில் இருந்து மின்கம்பிகளுக்கு செல்வதால், இரண்டு மின் கம்பிகள் உரசி மின்சார தடை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்தார்.
ராமதாஸ் டுவிட்டரில் விமர்சனம்
சென்னையில் இப்போதெல்லாம் அடிக்கடி மின் தடை ஏற்படுவதன் மர்மம் என்னவாக இருக்கும்? ஒருவேளை சென்னையில் அணில்கள் பூமிக்கு அடியில் ஓடுகின்றனவோ?இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment