நம் ஊரில் உள்ள சின்ன ஹோட்டல் ஒன்றில் ,கையில் தூக்கு வாளியுடன். ஒரு 10 வயது சின்னக் குழந்தை "அண்ணா...! அம்மா 10 இட்லி வாங்கி வர சொன்னாங்க...! காசு நாளைக்கு தருவாங்களாம் என்றது...
ஹோட்டல் நடத்துபவர், "ஏற்கனவே கணக்கு நிறைய பாக்கி இருக்கு.... அம்மாக்கிட்டே சொல்லுமா....
இப்போ வாங்கிட்டுப்போ...
தூக்கு வாளியை தா
சாம்பார் ஊத்தி தாரேன் என்றார் ...
இட்லி பார்சலையும், சாம்பார் நிறைத்த தூக்குவாளியையும் அந்த குழந்தையிடம் தருகிறார்.
குழந்தை, "சரி... அம்மாட்ட சொல்றேன்... போயிட்டு வரேன் அண்ணே.... "
என்றபடியே குழந்தை கிளம்பிவிட்டாள்.
அந்த கடையில் நான் வாடிக்கையாய் சாப்பிடுவது வழக்கம்.
ஆதலால் நான் கேட்டே விட்டேன்... "நிறைய பாக்கி இருந்தா ஏன் மறுபடியும் குடுக்குறீங்க....?"
ஹோட்டல் முதலாளி
"அட சாப்பாடு தானே சார்.... நான் முதல் போட்டுத்தான் கடை நடத்துறேன்.
இருந்தாலும் இது மாதிரி குழந்தைகள் வந்து கேட்கும்போது மறுக்க மனசு வரல சார்...
அதெல்லாம் குடுத்துடுவாங்க...
என்ன கொஞ்சம் லேட் ஆகும்.... எல்லாருக்கும் பணம் சுலபமாவா சம்பாதிக்க முடியுது?
குழந்தை பசியால் கேட்டிருக்கும்.. அதான் சார், அந்த அனுப்பி இருக்காங்க..
நான் குடுத்துடுவேன் அப்டிங்கற அவங்க நமபிக்கையை நான் பொய்யாக்க விரும்பல சார்....
நான் உழைச்சி தான் சம்பாதிக்கிற காசு ...
வந்துடும் சார்.
ஆனா இப்போதைக்கு அந்த குடும்பம் சாப்பிடுதுல, அதுதான் சார் முக்கியம்"
நான் உணவு தரவில்லை என்றால் ,
அந்த குழந்தை , தன் தாயுக்காக
திருட போவான்....
அல்லது
அந்த தாய் தன் குழந்தை பசிக்காக , தவறான பாதைக்கு செல்வாள் ...
ஆனால், என்னால் _ நான் நஷ்டபட்டாலும், இப்பொழுது நம் சமுகத்தில் நடக்க இருந்த, இரண்டு தவறுகளை தடுக்க முடிந்திருக்கிறது என்றார் ஹோட்டல்காரர்...
நான் அன்று அளவாக தான் சாப்பிட்டேன்
ஆனாலும் "நிறைந்தது" அன்று மனது....
இறைவன் பூமியிலும் இருக்க தான் செய்கிறார்
நமக்கு தான் தெரிவதேயில்லை
No comments:
Post a Comment