உத்திரபிரதேசத்தில் ஒரு சிறிய நகரம்.
பார்பர் ஷாப் வாசலில் அமர்ந்திருக்கும் ஒருவரிடம் NDTV ஜேம்ஸ் பிரனாய் ராய் உங்கள் ஓட்டு யாருக்கு எனக் கேட்க "தாமரைக்கு " என்கிறார் அவர்
ஏன் ?
முன்பெல்லாம் எங்கள் வீட்டுப் பெண்கள் காலைக்கடன் கழிக்க விடியும் முன்பே வயல்வெளிக்குச் செல்வார்கள்.
மோடி திட்டத்தால் வீட்டில் கழிப்பிடம் கட்டினேன். எங்கள் பெண்களின் மானத்தைக் காத்த மோடிக்கே எங்கள் வீட்டிலுள்ள 6 ஓட்டும் என்கிறார் அந்தப் பெரியவர்.
வடக்கின் வாய்மை இது.
ஆனால் இங்கே...
முத்ரா கடன் பயனாளிகள் அதிகம்.
மோடி கேரில் இலவசமாக மருத்துவம் பார்த்தோர் அதிகம்.
மோடி திட்டத்தில் கழிப்பிடம் கட்டியோர் அதிகம் .
மோடி திட்டத்தில் வீடு கட்ட மானியம் வாங்கியோர் அதிகம்
மோடி மருந்தகத்தில் நியாயவிலையில் மருந்து வாங்குவோர் அதிகம்
மோடி திட்டத்தில் வருடம் 6 ஆயிரம் வாங்கும் விவசாயிகள் அதிகம்.
இவர்கள் மட்டும் ஓட்டு போட்டிருந்தாலே தனித்து போட்டியிட்டு தனி மெஜாரிட்டியில் வந்திருக்கும் பாஜக.
ஆனால் நடந்தது என்ன?
மனைவியின் தாலியை விற்றால் கூட பைபாஸ் சர்ஜரி செய்ய தேவையான நிதி கிடைக்காது என வருந்திய நபரை மோடிக்கேர் மூலமாக ஆபரேஷன் செய்து பிழைக்க வைத்தார் ஒரு சங்கத்து நபர். செலவு என்பது போக்குவரத்து செலவும் உடனிருந்தவர் உணவு செலவும்தான்.
குணமான ஒரிரு மாதங்கள் கழித்து அந்த சங்கத்து நபரிடம் அவர் சொன்னது , " பணப்புழக்கமே இல்லை. அடுத்த முறை மோடி வரக் கூடாது சார் . நாட்டைக் கெடுத்து குட்டிச் சுவராக்கி விடுவார் ?"
கலிகாலம் என்பது உண்மைதான்போல.
நிலைமை இப்படி இருக்க தான் விதிக்கும் வரியை பெட்ரோலுக்கு மத்திய அரசு குறைத்தவுடன் தமிழர்கள் அனைவரும் வரிசையில் நின்று தாமரைக்கா ஓட்டு போட்டு விடுவார்கள்.?
உலகின் மூத்தகுடியான தமிழ்க்குடி அந்த நன்றியறிதலை ஒருபோதும் செய்யாது.
No comments:
Post a Comment