Saturday, June 26, 2021

#ஜெய்ஹிந்த்.

 தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் உரையில் ஜெய்ஹிந்த் என்ற புனிதமான வார்த்தைகள் விலக்கப்பட்டதை, திமுக அரசின் சாதனை என்று ஒரு மதிகெட்ட உறுப்பினர் பாராட்டியுள்ளார்.

இதற்காக முதலில் வெட்கி தலைகுனிய வேண்டியவர்கள் அவருக்கு ஓட்டளித்த 81688 திருச்செங்கோடு வாக்காளர்கள்...
இந்த தகாத செயலின் முதல்குற்றவாளி திமுக அரசு.
இரண்டாம் குற்றவாளிகள்
ஆளுநர் உரையை தயாரிப்பதில் பங்கு பெற்ற தமிழக IAS அதிகாரிகள். அவர்கள் குடியரசு தலைவரால் (President) பணியமர்தப்பட்டவர்கள்.
மன்னிக்க முடியாத மூன்றாம் குற்றவாளிகள் தேசீயமும் தெய்வீகமும் இரு கண்கள் என்று கூறிக்கொண்டு சட்டசபையில் வாய்மூடி மெளனித்திருந்த நான்கு பாஜக MLA.
நான்காம் குற்றவாளிகள் சட்டசபை காங்கிரஸ் உறுப்பினர்கள்.
இந்திரா காந்தியின் ஒவ்வொரு பொதுக்கூட்டத்தின் இறுதியில் ஒருமுறை அல்ல மூன்று முறைகள் ஜெய்ஹிந்த் என்று முழங்கும் வழக்கத்தை இவர்கள் மறந்து போனது திமுகவிடம் சோரம் போனதால்..
ஐந்தாவது குற்றவாளி இதுவரை இதை பற்றி பேசாமல், எச்சரிக்காமல், நடவடிக்கைகள் எடுக்க உத்திரவிடாமல் இருக்கும் மத்திய அரசு.
திராவிட குட்டையில் ஊறிய ஈனமதியர்களின் பழுதுபட்ட மூளையில் உரைப்பதற்கு :
ஜெய்ஹிந்த் என்பதன் அர்த்தம் இந்தியாவுக்கு வெற்றி (Victory to India)என்பதே.. இந்தியா உன் தாய்நாடு.. அதைஉன் ஈனபுத்தியால் இழிவுசெய்யாதே.
ஜெய்ஹிந்த் என்ற சொல்லை 1907 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தவர் செண்பகராமன் பிள்ளை என்ற கன்னியாகுமரி தமிழன். வீரப்போராளி (Revolutionary)
அதை இந்திய தேசிய ராணுவத்தின் (Indian National Army -INA) அதிகாரி மேஜர் அபித் ஜெயின் உல் ஹசன் (Maj Abid Zain Ul Hasan) நேதாஜி யிடம் சொல்ல அது INA வின் போர் முழக்கம் (War cry)ஆனது.
நம் நாடு சுதந்திரம் பெற்றபின் அதை அரசு தேசீய முழக்கம் ஆக்கியது..இன்று இந்திய ராணுவத்தின் யுத்த கோஷங்களில் (War cries) ஒன்று.
ஜெய்ஹிந்த்தை சிறுமை படுத்தி இந்திய ராணுவத்தினரை அவமதித்து விட்டாய்..
இந்திய ராணுவத்தின் அதிகாரிகள், வீரர்கள் பணிநிமித்தம் (official), சந்திக்கும்போது கட்டாயம் கூறும் சொல் ஜெய்ஹிந்த் சார்.
30 லட்சம் + ராணுவ வீரர்களின் ரத்தத்தில் ஊறிய, மூச்சுக் காற்றில் வெளிப்படும் புனிதமான சொல் ஜெய்ஹிந்த்.
பணியில் உள்ள ராணுவ வீரர்களும், ஓய்வு பெற்ற ராணுவத்தினரும் அந்த ஒரு சொல்லுக்காக எதையும் இழக்க துணிந்தவர்கள்.
இத்தகைய புனிதமான சொல்லை கொச்சை படுத்தி தரம் தாழ்ந்து போய்விட்டாய்.
ஜெய்ஹிந்த் வடமொழி சொல் அதனால் அதை புறக்கணித்தாய் என்றால் 61 வருடங்களாக உன் ரேஷன் அட்டையிலிருந்து, ஆதார் அட்டை வரை பதிந்துள்ள பெயர் வடமொழி சொல் என்பதை மறந்துவிட்டாய். உன் கபட நாடகத்தை தொடரும் முன்பு அதை மாற்றிக்கொள்...
ஜெய்ஹிந்த்
வந்தேமாதரம்
பாரத் மாதா கி ஜெய்.
ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...