தமிழக பாஜக, திமுக வின் வலையிலும் திராவிஷத்திலும் விழுந்து விட்டதாகவே தெரிகிறது.
இன்றைய சட்டசபை விவாதத்தில் பாஐகவினர் "ஓன்றிய" அரசு என்றே ஸ்டாலின் கூறிய போது, இனிமேலும் அப்படிதான் கூறுவோம் என்ற போதும், அதை எதிர்த்து சரியான வாதத்தை வைக்கவில்லை.
NEET விவாதத்தில் சட்டபூர்வமாக விலக்கு அளித்தால் ஆதரிப்போம் - நயினார்.
என்ன மோசமான நிலைப்பாடு? நீட் தேர்வினால் எவ்வளவு நன்மைகள் என ஆணித்தரமாக சொல்லிருக்க வேண்டாமா? எப்படி இந்தியா முழுவதும் நன்மை பயக்கிறது என சொல்லிருக்க வேண்டாமா? தமிழக மாணவர்கள திறமையானவர்கள் என கூறியிருக்க வேண்டாமா? நாங்கள நீட் டை ஆதரிக்கிறோம் என சொல்லிருக்க வேண்டாமா? அதுதானே உண்மை?
இப்பொழுது பாருங்கள்... திமுக ஏற்கனவே ஏற்பாட்டின்படி நீதிபதி கமிஷனில் நீட் டினால் பாதகம் என அறிக்கை வாங்கி...தமிழக பாஜக வைத்தே மத்திய அரசிடம் பேசி அனுமதி வாங்கி தர சொல்வார்கள். (ஆதரித்ததால). வாங்கினாலும் (சாத்தியமில்லை) இதை ஏன் முன்பே செய்யவில்லை என முகபணியாளர்கள் மூலம் உருட்டு. வாங்காவிட்டாலும் பாஜக செய்யவில்லை என உருட்டு.
(இது போல்தான் அர்சசகர் விசயத்திலும் நடக்க போகிறது)
தமிழக பாஜக வை முற்றிலுமாக மாற்றி அமைக்காவிட்டால் 50 வருடமானாலும் தமிழகத்தில் ஆட்சியை விடுங்கள், காலூன்றவே முடியாது.
ஓரு சீறிய நேர்மையான துணிவான தலைமை உடனடி தேவை தமிழக பாஜக விற்கு.
கலைஞர் போன்ற சாதுர்யமில்லாத, பல "தெர்மோகோல்கள்" கொண்ட ஆட்சியையே இவர்களால் திறமையாக சமாளிக்க முடியவில்லையே??
தேவை தமிழக பாஜவிற்கு ஒரு அவசர operation.
கவனிப்பார்களா மோடிஜி, அமித்ஜி??
No comments:
Post a Comment