Thursday, June 24, 2021

டெல்லி டிரிப்பிற்கு பின்.. கனிமொழிக்கு தரப்படும் டாஸ்க்?

திமுக திட்டம்?
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் டெல்லி பயணத்திற்கு பின் எம்பி கனிமொழிக்கு டெல்லியில் முக்கியமான சில பணிகள் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன. திமுக சார்பாக முக்கியான சில டாஸ்குகள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
மத்தியில் 2014க்கு முன் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்த போது.. தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் பலருக்கு தேசிய அளவில் பெரிய வாய்ஸ் இருந்தது. முக்கியமாக திமுகவின் கனிமொழி டெல்லியில் முக்கியமான நபராக பார்க்கப்பட்டார்.
தமிழ்நாட்டிற்கான திட்டங்களை கொண்டு வருவதிலும், தேசிய அளவில் முக்கிய விஷயங்களில் தமிழ்நாட்டின் கருத்தை தெரிவிப்பதில் கனிமொழி முக்கிய பங்கு வகித்தார். திமுக இவரை தமிழ்நாட்டின் முகங்களில் ஒன்றாக அடையாளப்படுத்தியது.
அதன்பின் ஆட்சிகள் மாற கொஞ்சம் கொஞ்சமாக கனிமொழி மீதான கவனம் குறைந்தது. அதன்பின் மீண்டும் 2019 லோக்சபா தேர்தலில் ஸ்டாலின் தலைமைக்கு கீழ் கனிமொழி எம்பியாகி மீண்டும் டெல்லிக்கு அனுப்பப்பட்டார். கனிமொழி தூத்துக்குடியில் இருந்து எம்பியாகி டெல்லி சென்றதில் இருந்தே மீண்டும் தேசிய அரசியலில் கனிமொழியை திமுக முன்னிறுத்துகிறதோ என்ற கேள்வி நிலவி வந்தது.
கனிமொழி தேசிய அளவில் பல்வேறு அரசியல் தலைவர்களுடன் நட்பானவர். கட்சி கடந்து பாஜக அமைச்சர்களிடமும் சரி, திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா போன்ற கட்சி தலைவர்களிடமும் கூட கனிமொழி நல்ல நட்பு கொண்டவர். தேசிய அரசின் நுணுக்கங்கள் முன்பில் இருந்தே கனிமொழிக்கு தெரிந்த விஷயம்தான். இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலினின் டெல்லி பயணத்திலும் கனிமொழிக்கு தனி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
முதல்வரின் பயணத்தின் போது கனிமொழி ஒரு பக்கம் தனித்து தெரிந்தார். இந்த நிலையில்தான் டெல்லியில் கனிமொழிக்கு முக்கிய சில டாஸ்க் கொடுக்கப்படும் என்று பேச்சு அடிபடுகிறது. திமுக எம்பி டிஆர் பாலு ஏற்கனவே டெல்லியில் திமுகவிற்காக முக்கிய பணிகளை கவனித்து வரும் நிலையில், கனிமொழிக்கு டாஸ்க் கொடுக்கப்பட உள்ளது. மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டிற்காக பல்வேறு தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் தமிழ்நாடு அரசு உள்ளது. கோரிக்கை, கடிதம் என்பதை தாண்டி அரசு சார்பில் சிலர் நேரடியாக பேசினால் மட்டுமே காரியம் நடக்கும்.
மத்திய அமைச்சர்களை தமிழ்நாடு அரசு சார்பாக வலுவான தலைவர்கள் சிலர் சந்தித்து பேசினால் மட்டுமே தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய திட்டங்கள், நிதிகள் முறையாக கிடைக்கும். இந்த பணிகளை டிஆர் பாலு ஏற்கனவே நன்றாக கவனித்து வரும் நிலையில், தேசிய அரசியல் தலைவர்களுடன் நட்பாக இருக்கும் கனிமொழியும் இதில் களமிறக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. முதல்வரின் டெல்லி பயணத்திலேயே இதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுவிட்டது என்கிறார்கள்.
அதன்படி தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளை மத்திய அமைச்சர்களிடம் கொண்டு சேர்ப்பது, அவர்களிடம் கோரிக்கைகள் குறித்து நேரடியாக பேசுவது உள்ளிட்ட பணிகளை கனிமொழி வரும் நாட்களில் கவனித்துக்கொள்வார் என்கிறார்கள். ஜிஎஸ்டி நிலுவை தொகை தொடங்கி முதல்வர் ஸ்டாலின் வைத்த 20க்கும் மேற்பட்ட கோரிக்கைகளில் மத்திய அரசு இனிதான் முடிவு எடுக்கும்.
இதனால் கனிமொழி இனி அடிக்கடி டெல்லி செல்ல வேண்டி இருக்கும் என்கிறார்கள். தமிழ்நாடு அரசு எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளும் தற்போது தேசிய அளவில் பேசப்படுகிறது. தமிழ்நாடு மீது மீண்டும் தேசிய அரசியலின் போகஸ் திரும்பி உள்ளது. இதனால்தான் டிஆர் பாலு, ஏகே எஸ் விஜயன் என்று தமிழ்நாடு அரசு முக்கிய தலைகளை டெல்லி அனுப்பி உள்ளது. இதனால் விரைவில் கனிமொழியும் டெல்லியில் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...