நேற்றைய சட்டசபை NEET விவாதத்தில் சட்டபூர்வமாக விலக்கு அளித்தால் ஆதரிப்போம் என சறுக்கியிருக்கிறார்கள் ...
என்ன ஒரு மோசமான சறுக்கல் ?
நீட் தேர்வினால் எவ்வளவு நன்மைகள் என ஆணித்தரமாக சொல்லிருக்க வேண்டாமா?
எப்படி தமிழக ஏழை மாணவர்கள் இந்தியா சென்று படிக்க முடிகிறது என சொல்லிருக்க வேண்டாமா?
தமிழக மாணவர்கள திறமையானவர்கள் என்பதை புள்ளி விபரத்துடன் கூறியிருக்க வேண்டாமா?
தனியார் மருத்துவ கல்லூரி கொள்ளை நீட் தேர்வு மூலம் தடுக்க பட்டிருக்கிறது என்பதை புள்ளி விபரத்துடன் சொல்லி இருக்க வேண்டாமா ?
நீட் தேர்வு வருவதற்கு முன்னால் 2006 முதல் 2016 வரை பத்து ஆண்டுகளில் +2 மதிப்பெண் மூலமாக MBBS மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்த பொழுது மொத்தமாக இருந்த 29925 இடங்களில் வெறும் 213 அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே MBBS கிடைக்கப்பட்டு படித்தார்கள். அது வெறும் 0.7% மட்டும்தான் . ஆனால் நீட் வந்த பிறகு 7.5% உள் இடஒதுக்கீடு கொடுத்த 2020 - 2021 ல் மட்டும் 237 பேர் அரசு மருத்துவக் கல்லூரியிலும்,97 பேர் தனியார் மருத்துவக் கல்லூரியிலும் சேர்த்துள்ளனர் . நீட் தேர்வுநீக்கப்பட்டால் இந்த 7.5 சதவீத இட உள் ஒதுக்கீடும் நீக்கப்படும். இது கிராமப்புற / அரசுப்பள்ளி மாணவர்களுக்கு படுபாதகமாக அமையும்.
தமிழ்நாடு மேல்நிலைக்கல்வி பாடத்திட்டம் 13 வருடங்களாக திருத்தப்படாமலும், 11ஆம் வகுப்பு பாடத்தை முழுமையாக கற்பிக்காமல் , நேரடியாக 12ஆம் வகுப்பு பாடத்தை blueprint எனப்படும் மனப்பாடம் செய்யும் முறை மூலம் கிணற்றுத்தவளைகளாக வளர்க்கப்பட்டதால்தான் AIIMS, JIPMER, AFMC போன்ற இந்தியாவின் தலைசிறந்த மருத்தவ கல்லூரிகளில் தமிழ்நாடு பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் நீட் தேர்வு இல்லாத பொழுது ஒருவர்கூட சேரவில்லை ஆனால் நீட் தேர்வு வந்த பிறகு 2020 ம் ஆண்டு 30+ தமிழ்நாட்டு மாணவர்கள் AIIMS, JIPMER & AFMC ல் சேர்ந்துள்ளார்கள். நீட் 2019 ம் ஆண்டு தேர்வில் இந்தியாவின் தேர்ச்சி சராசரி 56.50% .தமிழ்நாட்டு மாணவர்களின் தேர்ச்சி சராசரி 48.77%. நீட் 2020 தேர்வில் இந்தியாவின் தேர்ச்சி சராசரி 56.44%(எந்த மாற்றமுமில்லை. ஆனால் நம் தமிழ்நாட்டு மாணவர்களின் தேர்ச்சி சராசரி 9% அதிகரித்து 57.44% என்று தேசிய சராசரியை விட அதிகமாகி உள்ளது . 20 வருடங்களாக நுழைவுத்தேர்வு நடத்திவரும் கேரளாவை விட நம் மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்து தேசிய அளவில் முதல்முறையாக 8ஆவது இடம் பிடித்து இருக்கிறார்கள்.
எனவே நாங்கள நீட் டை ஆதரிக்கிறோம் என சொல்லிருக்க வேண்டாமா? அதுதானே உண்மை?
நீட் தேர்வில் தமிழகத்திற்கு மட்டும் மட்டும் விலக்கு பெற்று, +2 தேர்வு கட் ஆப் மதிப்பெண் மூலம் தமிழ்நாட்டில் மருத்துவ கல்லூரி சேர்க்கை நடைபெற்றால் மாணவர்களுக்கு ஏற்படும் நீண்டகால கீழ் காணும் பாதிப்புகள்குறித்து விளக்கி இருக்க வேண்டாமா ??:
1. தமிழ்நாட்டில் நீட் தேர்வு விலக்கப்பட்டால், தமிழக மாணவர்கள் ஐஐடி JEE, IISc KYPY போன்ற மத்திய அரசு பல்கலைக்கழகங்கள் நடத்தும் நுழைவு தேர்வுக்கு தயாராவது பாதிக்கப்படும். இந்த உலகத் தரம் வாய்ந்த மத்திய பல்கலைக்கழகங்களில் ஆந்திரா போன்ற மாநிலங்களின் மாணவர்கள் ஏற்கனவே அதிக அளவில் சேர்கின்றனர். தமிழகத்தில் நீட் தேர்வு வந்த பின்னர்தான் தமிழக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு அகில இந்திய அளவிலும் உலக அளவிலும் நடத்தப்படும் போட்டித் தேர்வுக்கும், நுழைவுத் தேர்வும் தமிழக மாணவர்கள் தயாராகிறாரகள். இந்த நிலையில் தமிழகத்தில் நீட் தேர்விற்கு விலக்கு அளிக்கப்பட்டால், தமிழக மாணவர்களின் முன்னேற்றம் நீண்ட கால அடிப்படையில் வெகுவாக பாதிக்கப்படும்.
2. நீட் தேர்வின் மூலம் மாணவர்களுக்கு தங்கள் மருத்துவர் ஆகும் கனவை நனவாக்க பல வாய்ப்புகள் கிடைக்கிறது. ஒரு வருடம் தவற விட்டாலும் தொடர்ந்து படித்து அடுத்த வருடத்தில் மருத்துவ கல்லூரியில் சேர்ந்து விடலாம். 15 சதவீத ஆல் இந்தியா கோட்டவிலும் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் மட்டுமல்லாமல் பிற மாநில மருத்துவ கல்லூரிகளிலும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எய்ம்ஸ்,ஜிப்மர் மற்றும் ராணுவ மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியும். நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டால், இந்த வாய்ப்புகள் பறிபோகும்.
3. தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டம், சிபிஎஸ்இ பாடத்திட்டம், ஐசிஎஸ்சி பாடத்திட்டம், ஆங்கிலோ இந்தியன் பாடத்திட்டம் போன்ற பல்வேறு பாடத்திட்டத்தில் மாணவர்கள் படிக்கிறார்கள். இவர்களின் +2 மதிப்பெண்களை ஒப்பீடு செய்வது என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லாத காரியமாகும். இதில் மாநில பாடத்திட்டத்தின் மதிப்பெண்களை மட்டுமே கொண்டு சேர்க்கை நடத்துவதால் மற்ற பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். ஏனென்றால் மாநில பாடத் திட்டத்தில் அதிக மதிப்பெண்களை பெறுவது எளிதாகும் மற்ற பாடத்திட்டங்களில் அதிகப்படியான மதிப்பெண்களை பெறுவது மிகவும் கடினமாகவும் இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஏற்கனவே பயன்படுத்த பட்ட Normalization என்ற முறை சரியானதாக இல்லை ஏனென்றால் ஒரு சில மாணவர்கள் எல்லா பாடத்திட்டத்திலும் 100% மதிபெண்களை பெற்று விடுகின்றனர் . இதனால் Normalization செய்தால் எந்த பலனும் இல்லை. எனவே அனைவரின் அறிவை சோதிக்க நீட் , IIT JEE போன்ற standardised test தேவைப்படுகிறது.
4. நீட் தேர்வில் தமிழகத்திற்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டால், தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகள் நன்கொடைகள் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் பெற்றுக்கொண்டு நிர்வாக ஒதுக்கீட்டு கோட்டாவில் எந்த ஒரு இட ஒதுக்கீடு முறையையும் பின்பற்றாமல் மாணவர்களை சேர்க்கும் பழைய மோசமான நிலைக்கு திரும்பும். ஆனால் நீட் தேர்வின் மூலம் நடத்தப்படும் நிர்வாக ஒதுக்கீடு கோட்டா மாணவர் சேர்க்கை முழுக்க முழுக்க மாநில அரசு கவுன்சிலிங் அல்லது மத்திய அரசு சென்ட்ரல் கவுன்சிலிங் மூலம் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் 69% இடஒதுக்கீடு முறையை முற்றிலும் பின்பற்றி மட்டுமே நடத்தப்படுகிறது. இதனால் தனியார் மருத்துவ கல்லூரிகளில் நன்கொடை வசூலித்து அவர்களாக இடங்களை நிரப்ப முடியாது. மேலும் நீட் தேர்வுக்கு முன் தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு கோட்டாவில் வெளிமாநில மாணவர்களை தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கோடிக்கணக்கான ரூபாய் நன்கொடை பெற்று கொண்டு எந்த ஒரு இட ஒதுக்கீடு முறையையும் பின்பற்றாமல் சேர்த்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால் இப்பொழுது நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் வெளிப்படையாக மாநில கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் தமிழ்நாடு மாணவர்கள் மட்டுமே பங்கு பெற முடியும். இதனால் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு கிடைக்கும் கோடிக்கணக்கான ரூபாய் நன்கொடை கிடைப்பதில்லை. அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே கிடைக்கிறது. அதனால் தங்கள் சீரிய தலைமையிலான தமிழக அரசு இது போன்ற ஒருதலை பட்சமானவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்காமல் , தமிழக மக்களின் நீண்ட கால நலன் கருதி ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
5. தமிழகத்தில் கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கையில் மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்காதவர்கள் வேறு எந்த கல்லூரியிலும் சேராமல் , REPEATER முறையில் அடுத்த வருட நீட் தேர்வுக்காக தயார் ஆகி வருகின்றனர். இந்த சூழ் நிலையில் , நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டால் , இந்த REPEATER மாணவர்களின் எதிர்காலம் கடுமையாக பாதிக்கப்படும்.
6. நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டால் எதிர்காலத்தில் தமிழக மாணவர்கள் போட்டி தேர்வுகளை கண்டு அஞ்சும் நிலை ஏற்படும் . இப்பொழுதே மத்திய அரசு வேலைக்காக நடத்தும் போட்டி தேர்வுகளில் தமிழக மாணவர்கள் பின் தங்கி உள்ளனர். இதற்கு மாணவர்களின் திறமை குறைவு காரணம் இல்லை . அவர்கள் தன்னை போட்டி தேர்வுக்கு தயார் படுத்த வில்லை என்பதே உண்மை.
இதையெல்லாம் சொல்ல தவறி விட்டார்கள் இப்பொழுது பாருங்கள்... முன்னாள் நீதிபதி கமிஷனில் நீட் டினால் பாதகம் என அறிக்கை வாங்கி...தமிழக பாஜக வைத்தே மத்திய அரசிடம் பேசி அனுமதி வாங்கி தர சொல்வார்கள். (ஆதரித்ததால). வாங்கினாலும் (சாத்தியமில்லை) இதை ஏன் முன்பே செய்யவில்லை என முகபணியாளர்கள் மூலம் உருட்டு....
எங்கள் தளபதி ஒன்றிய அரசை பணிய வைத்தார் என ஒரு உருட்டு.. வாங்காவிட்டாலும் பாஜக செய்யவில்லை என உருட்டு...
எல்லாமே பாழாக போகிறது..
தமிழக பாஜக வை முற்றிலுமாக மாற்றி அமைக்காவிட்டால் 50 வருடமானாலும் தமிழகத்தில் ஆட்சியை விடுங்கள், காலூன்றவே முடியாது.
ஓரு சீறிய நேர்மையான துணிவான தலைமை உடனடி தேவை தமிழக பாஜக விற்கு.
சாதுர்யமில்லாதவர்களை கொண்ட ஆட்சியையே இவர்களால் திறமையாக சமாளிக்க முடியவில்லையே??
தேவை தமிழக பாஜவிற்கு ஒரு அவசர operation.
கவனிப்பார்களா தலைமை??
No comments:
Post a Comment