Monday, September 20, 2021

*உண்மை கதை* !!!

 அன்றாட வீட்டு வேலைகளில் உதவிடும் குழந்தைகள் தாம் வாழ்வில் மிகச்சிறந்த வெற்றியடைய முடியும் !!!!

சமீப காலங்களில் என்னுடைய மருத்துவமனைக்கு வரும் பெரும்பாலான குழந்தைகளின் பெற்றோர் தரும் செய்தி ,
அதில் இன்று வந்த ஒரு பெண்மணி ,
சார் என் குழந்தைக்கு ஷு லேஸ் கூட கட்ட தெரியாது சார் !!
தலை சீவ மாட்டான் ,
நான் தான் *இன்றும் உணவு கூட ஊட்டி விடுகிறேன்* ..
வயசென்னமா ஆச்சு ??
*10 வயசு சார்*
சரி !!! 😲
என்ன படிக்கறார் மா ?
6 ம் வகுப்பு சார் .
சூப்பர்
எப்படி படிப்பார் ?
நல்லா படிக்கறான் சார் ,
ஆனா
க்ரேட் தான் நெனச்ச மாதிரி வரல
கணக்குல ரொம்ப வீக் ,
ஸ்போர்ட்ஸ் இண்ட்ரெஸ்ட் இல்ல ,
செஸ் வரமாட்டேங்குது
கராத்தே போக மாட்டேங்கறான் ,
ஸ்விம்மிங் க்ளாஸ் போறான் ஆனா சளி பிடிக்குது வேண்டாம்னு வெச்சுட்டோம்.!!
வெஸ்டெர்ன் மியூசிக் படிக்கறான் ,
ஒகெ
ஒகெ..!
*வீட்டு வேலைகளில் அக்கரை இருக்காமா* ??
வீட்டு வேலனா என்ன சார் ?
அவன் உங்களுக்கும் உங்கள் அன்றாட தேவைக்கும் செய்யும் உதவிகள் மா ..!
அட நீங்க வேற சார் ,
தண்ணீர் குடிக்க கூட எந்திரிக்க மாட்டான் !! 😢
இது நல்லதாம்மா?
நல்ல படிச்சா போதும் சார் !!/
*அப்படியானால் எதுக்கு கராத்தே ,நீச்சல் எல்லாம் அனுப்பறீங்க* ..!?
எல்லாம் தெரிஞ்சிருக்கனும் இல்ல சார் ,
நாளைக்கு அவன் தனி ஆளா இந்த உலகத்தை சமாளிக்கனுமே !!
ஓஹோ...!
ரைட்டு.
வீட்டில் உள்ள விஷயங்களை சமாளிக்க தெரியாமல் எப்படிமா ஊரிலும் ,நாட்டிலும் , வெளி நாட்டிலும் உள்ள விடயத்தினை சமாளித்திட முடியும் !!
*அதில்ல சார்* ,
*ஒரே பையன்* ??
இது இன்னும் மோசம் ,
அப்ப , நீங்க மேலும் எச்சரிக்கையாக இருக்கணுமே மா !!
அவரிடம் விபரங்களை கூறி , அந்த சிறுவனிடமும் அவனது பழக்க வழக்கங்களில் இருந்த சாதக பாதகங்களை எடுத்து கூறி ,
அன்றாடம் அவன் செய்ய வேண்டிய விடயங்களை ஓர் அட்டவணை போட்டு கொடுத்து அனுப்பிவிட்டேன் !!
*தற்போது கதை சுருக்கம்* ..!
ஹார்வார்ட்_பல்கலைக்கழகம் நடத்தும் மானுடர்களுக்கான மிகப்பெரிய ஆய்வுகளில் ஒன்றான
*Harvard_Grant_study* எனும் ஆய்வில் ,
குழந்தைகளை அன்றாட வீட்டு பணிகளில் இருந்து விலக்கி வைப்பது பெரும் அபத்தம் எனவும் ,
இதனால் அவர்களது பலவகையான ஆற்றல்களின் ஆக்கங்கள் குறைபடும்.எனவும் அறிவுறுத்துறது ,
மேலும் ,
படிப்பு ,
கற்றல் ,
போட்டி தேர்வு ,
தரவரிசை ,
மதிப்பெண் ,
மதிப்பீடு ,
பல்வேறு கலை கற்றல்
இவை அனைத்திற்கும் தேவைப்படும்
ஆக்கமும்,
ஊக்கமும்,
மன தைரியமும்,
நம்பிக்கை தூண்டலும் ,
வெற்றி ,தோல்விகளை பகுத்தறியும் பக்குவமும் ,
உடனிருப்போருடன் உறவாடும் உளவியலும் ,
நிச்சயமாக வீட்டில் நடத்திடும் நடத்தைகளே தீர்மானிக்கும் என்கிறது இந்த ஆய்வு .!
மாறாக ,
சிறு வேலகளை கூட செய்திட முடியாமல் இருக்க செய்ய செய்திட அனுமதிக்காத பெற்றோர்களை இந்த ஆய்வு எச்சரிக்கிறது ,
சார் ..
என்ன சார் இது குழந்தையை எல்லாம் வேலை வாங்க சொல்றீங்க ,
*குழந்தை தொழிலாளர் ஒழிக்க பாடுபடும் தேசம் சார் இது* ??
உண்மை .!
*நான் அவர்களை வேலை வாங்க சொல்லவில்லை* ,
உங்கள் அன்றாட வேலைகளில் அவர்களை சேர்த்துக்கொள்ள தான் சொல்கிறேன்
தினமும் பள்ளி செல்லும் குழந்தைகளானால்
அவர்களது தண்ணீர் பாட்டிலை அவர்களே நிறைக்க செய்யுங்கள் ,
அவர்களின் உணவு தட்டினை அவர்களை எடுத்து வந்து உணவை வாங்கி , தானாக் உண்ண செய்யுங்கள்
அவர்கள்
தலை சீவுவது,
காலணி அணிவது ,
அதற்கான பாலிஷ் போடுவது ,
*வார விடுமுறைகளில்* ,
வீட்டின் சுற்றங்களை சுத்தம் செய்தல்,
செடிகளுக்கு நீர் பாய்ச்சுதல் ,
கார் (அ) பைக் கழுவ உதவுதல் ,
படுக்கை உறை மாற்றுதல் ,
வாஷிங் மெசினில் அவர்கள் துணிகளை எடுத்து போடுதல் ,
வெயிலில் காய்ந்த துணிகளை மடித்து வைத்தல் ,
சமையலுக்கு காய்கறி கழுவுதல் ,
குளிர்சாதன பெட்டியை சுத்தம் செய்தல் ,
சமையலறை பொருட்களை அடுக்குதல் ,
என சின்ன சின்ன வேலைகளை வார கடமையக்கிடுங்கள் ,
*அவர்களை அன்றாட வாழ்வியலிலிருந்து அன்னியப்படுத்திடாதீர்கள்* ,
இவ்வனைத்திற்கும் ஒரு அழகான சன்மானம் வாராவாரம் வழங்கிடுங்கள் ,
*அவர்கள் விரும்பும்படி ஏதேனும் ஓர் ஹாபி அமைத்துகொடுத்தல்* ,
மீன் தொட்டி
பறவை ,
நாய்குட்டி ,
புறாக்கள் ,
பூச்செடி கொடிகள் ,
அவைகளை பராமரித்திட செய்யுங்கள் ,
முடிந்தவரை
வீட்டில் இருக்கும் நேரங்களில்
தொலைக்காட்சி 📺
கணினி விளையாட்டுக்கள்,
திரைப்படங்கள்
உணவக உணவுகள் என அவர்களின் எண்ணங்களை செயற்கையான விடயத்திலிருந்து ,இயல்பான நம் அன்றாட தினசரி வேலைகளில் ஈடுபட செய்யுங்கள்
இன்று பல கல்லூரி மாணவர்கள் , அதிலும் முக்கியமாக மருத்துவம் பயிலும் மாணாக்கர் கூட தற்கொலை வரை சுலபமாக முடிவெடுத்து சென்றிடும் மிக முக்கிய காரணம் ,
தம்மையும் தம் சுற்றத்தினையும் பேணிட அறியாததால் மட்டுமே !
🌹🌹🌹❤️❤️❤️

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...