Monday, September 20, 2021

தனி அமைச்சர் அந்த துறைக்கு மகா அவசியம் என்பது தெரிகின்றது.

 தமிழக ஒன்றிய அரசு தமிழகத்தில் வளைகாப்பு போன்ற கலாச்சார‌ நிகழ்வுகளுக்கும் ஒரு துறை அமைத்து, ஒரு அமைச்சர் வைத்து தமிழக கலாச்சாரத்தை வளர்க்க தனி கவனம் எடுத்திருப்பது வாழ்த்துகுரியது

ஆனால் கடுமையான பொறுப்புக்களை கொண்ட நிதியமைச்சருக்கு கூடுதலாக இந்த துறையினை கொடுத்திருப்பது சரியல்ல,ஒரு வளைகாப்பு நிகழ்வினை தவிர்க்க முடியாததால் முக்கியமான ஜிஎஸ்டி கூட்டத்துக்கே அவரால் செல்ல முடியவில்லை
தனி அமைச்சர் அந்த துறைக்கு மகா அவசியம் என்பது தெரிகின்றது
இதனால் தாலியோ நகையோ அணியாமல் கறுப்பு சேலை அணிந்து அமங்கலமாக வரும் திக திமுகவினரை தவிர்த்து, பட்டு சேலையும் கை நிறைய வளையலும் தலைநிறைய பூவுமாக வலம் வரும் தமிழச்சி தங்கபாண்டியன் போன்ற மங்களரமான திமுக அடையாளங்களை அந்த துறைக்கு நியமித்தால் நல்லது
ஆம், தமிழக நிதியமைச்சர் அடுத்து "காது குத்து" விழாவுக்கு செல்வதற்கு முன் இந்த அவசியமான மாற்றத்தை செய்தாக வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...