அதுபோல அதிகாரம் கையில் இருக்கும்போது இதுபோன்று திட்டமிடுதலுடன் கூடிய ஊழல் செய்தாலும் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது, இது ஊழல் அல்லது சட்ட விரோதம் என்று எந்த நீதிமன்றத்திலும் நிரூபிக்க முடியாது என்பது சபரீசனின் நம்பிக்கை.
பினாமிகள் பெயரில் ஏக்கர் வெறும் 10 லட்சம் ரூபாய்க்கு அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்வது, பின்னர் அந்தப் பகுதியில் சட்டமன்ற வளாகத்தை கட்டுவது என்று அரசு அறிவிப்பு செய்வது, அறிவித்த மறுநாளே ஏக்கர் 10 லட்சமாக இருந்த அந்த நிலத்தின் உடைய விலை ஏக்கர் ஒரு கோடியாக மாறும்.
ஒரே அறிவிப்பில் 1000% லாபம் ஈட்டுகிறார்கள்... ஒருவேளை புதிய சட்டமன்றம் அங்கு கட்டி சட்டமன்றம் நடைபெற தொடங்கிவிட்டால் ஏக்கர் 10 லட்சத்திற்கு வாங்கிய இந்த கோஷ்டிகளின் நிலத்தினுடைய மதிப்பு 10 கோடியாக மாறும் அதாவது பத்தாயிரம் ஆயிரம் சதவீதம் விலை உயர்வு...
இவ்வளவு பெரிய லாபத்தை அதாவது நூறு மடங்கு லாபத்தை அவ்வளவு எளிதாக எந்த தொழிலிலும் பெற்றுவிட முடியாது...
ஒரு அறிவிப்பில் அடுத்த தேர்தலுக்கு தேவையான பணத்தை திரட்டி விடலாம் போல, வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதிக்கு எப்படியும் 5 லட்சம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும் ஒரு தொகுதிக்கு 50 கோடி ரூபாய் தேவை 40 தொகுதிகளுக்கும் 2000 கோடி பணம் ஒரு அறிவிப்பில் வருகிறது.. இதுவல்லவா விஞ்ஞான ஊழல்..
அது எப்படி வெறும் 6 அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் குடும்பத்திற்கு மட்டும் தெரிந்த இந்த விவகாரம் அண்ணாமலை அவர்களுக்கு மட்டும் தெரிகிறது? பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவால் கூட இதை மோப்பம் பிடிக்க முடியவில்லை ஆனால் அண்ணாமலை அவர்கள் மோப்பம் பிடித்து வெளி கொண்டு வந்திருக்கிறார்? கருணாநிதி யின் விங்ஞானம் எப்படி பரிணாம வளர்ச்சி அடைந்து விட்டது பாருங்கள் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு பல மடங்கு ஊதியத்தை உயர்த்துவார் அதனால் அந்த பணிகளின் போட்டி அதிகமாகும் அப்போது அதன் ரேட் அதிகமாகும் தன் கல்லாவும் நிறையும் என்ற விங்ஞானம் (அப்போது தகுதி தேர்வுகள் இல்லாத காலம்)இன்று சபரிமாண வளர்ச்சி அடைந்துள்ளது.
No comments:
Post a Comment