படித்ததோ, பிடித்ததோ, கிடைத்ததோ ஏதோ ஒரு வேலையில் சேர்ந்து விட வேண்டும்.
சேர்ந்த வேலைக்கு நேரெதிரான ஒரு விஷயத்தை கற்றுக் கொள்ள வேண்டும்.
மெக்கானிக்கல் துறை-ஷேர் மார்க்கெட் இன்வெஸ்ட்மென்ட்
கணினி துறை-டூ-வீலர் ஸ்பேர்ஸ், கார் வாஷ்
ஆசிரியர்/பேராசிரியர்-சர்ட்டிஃபைடு யோகா/ஃபிட்னஸ் டிரெய்னர்
சொந்தமாக ஒரு தொழில் தொடங்குங்கள். நடுக்கடலில் துளை போட்டு பெட்ரோல் தான் எடுக்கனும் என்றெல்லாம் வானத்தை பார்த்துக்கொண்டு கனவு கானக்கூடாது. மசாலாவோ, கூரியரோ ஏஜென்சி எடுங்கள். அம்மாவை "நீதாம்மா மேனேஜர்" என்று ஒரு டேபிள் சேரைப் போட்டு உட்கார வைத்துக் கொள்ளுங்கள். லாபமோ நஷ்டமோ 6 மாதத்தில் பிஸினஸ் பற்றி நன்றாக தெரிந்துவிடும். திருமணத்திற்கு பிறகு பிஸினஸ் செய்ய யாரும் ஊக்குவிக்க மாட்டார்கள். எதுக்கு ரிஸ்க் என்று மாமியாரே பயபடுத்துவார்கள்.
30 வயசுக்குள் திருமணம் செய்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதில் அவசரம் காட்ட வேண்டாம். நீங்கள் ஆர்வமாக இருக்கலாம். ஆனால் உங்கள் பெற்றோருக்கு உங்களை காட்டிலும் பொறுப்பு அதிகம். வாழ்நாள் முழுதும் உங்களுக்கு எல்லாவிதத்திலும் துணையாக இருக்ககூடிய சிறந்த நபரையே தேர்ந்தெடுப்பார்கள்.
செலவு கணக்கு எழுதாதீர்கள். ஆமாம், சரியாகத்தான் சொல்றேன். செலவு செய்யுற வயசா இது? சம்பாதித்த பணத்தையெல்லாம் ஏதாவது எடுக்க முடியாத கணக்கில் சேர்த்து விடுங்கள் அத்தியாவசிய செலவு செய்தால் போதும். இஷ்டத்துக்கு செலவு செய்துவிட்டு அதை கணக்கு எழுதி வைத்தால் சரியா போச்சா?
டூவீலர் ஃபோர் வீலர், ஹெவி வெஹிக்கில் (HPMV/HTV
Heavy passenger motor vehicle/Heavy transport vehicle) லைசன்ஸ் எடுத்து விடுங்கள்.
ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிக் குழந்தைகளுக்கு டியூஷன் எடுக்க கற்றுக் கொள்ளுங்கள். எக்காலத்திலும் டிமாண்ட் உள்ள தொழில். குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க பெற்றோரானதும் பொறுமை போய்விடுகிறது. பார்ட் டைமில் டியூஷன் எடுத்து மாசம் 20 ஆயிரத்திற்கு மேல் வருமானம் பார்ப்பவர்கள் இருக்கிறார்கள்.
உணர்ச்சி வசப்படாமல் இருக்க கற்றுக் கொள்ளுங்கள். அதிக கோபமோ, மகிழ்ச்சியோ வாயை மூடி உணருங்கள். சிலசமயம் கண்களையும் மூடிக்கொள்ளலாம். உங்கள் எதிர்கால திட்டங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுங்கள்.
No comments:
Post a Comment