நீங்கள் டிரைவர், முடி திருத்துபவர் அல்லது வண்ணார் ஆக வேண்டுமென்றால் அக்னிவீர் ஆகுங்கள். நீங்கள் வாயில் காப்பேன் ஆக வேண்டுமென்றால் அக்னிவீர் ஆகுங்கள். பகோடா விற்க வேண்டும் என்றால் அக்னிவீர் ஆகுங்கள் - ப சிதம்பரம்.
முதலில் இந்தத் தொழில் எல்லாம் கேவலமானவைகளா? மட்டமான சிந்தனை. முடி திருத்துவது கேவலமா? அவர்கள் இல்லாத நிலையில் உன் முகத்தைப் பார்க்க முடியுமா? வெள்ளையும் சொள்ளையுமா திரியறீங்களே, வண்ணார் இல்லாமல் இது நடக்குமா? உன் காரை ஓட்ட டிரைவர் இல்லாமல் என்ன செய்வாய்?
மட்டமான சிந்தனை.
இராணுவப் பயிற்சி ஒருவனைத் தன் வேலைகளைத் தானே கையாளவும், ஒழுக்க முள்ளவனாகவும் செய்யும்.
சமூகத்தில் ஒரு அந்தஸ்து கிடைக்கும்.
பல நிறுவனங்கள் அவர்களை மதித்து வேலை கொடுக்கும். இப்பொழுதே பலர் வேலை கொடுப்போம் என்று அறிவித்து விட்டார்கள்.
எந்த வேலையும் இழிவானதல்ல்ல. உன்போல் மக்கள் சொத்தைக் கொள்ளை அடிப்பது தான் இழிவான செயல்.
ப சிதம்பரம் நீங்கள் சொன்ன தொழில்களெல்லாம் கேவலமானதல்ல...உழைப்பை மூலதனமாகவும், வியர்வை சிந்தி நேர்மையாக சம்பாதிக்கிறார்கள்...
உங்களைப் போல் ஊர் காசை கொள்ள அடித்து, ஊழல் செய்வது எங்கள் பிறப்புரிமை என்று, நீதிமன்றத்தை சந்திக்க துப்பில்லாமல் ஜாமீனும், வாய்தாவும் வாங்கிக் கொண்டு ஓடி ஒளியும் கோழைகள் இல்லை.. நீங்களெல்லாம் வாயை திறக்க யோக்கியதையே இல்லை...
No comments:
Post a Comment