இன்னக்கி காலை-ல 5 மணி இருக்கும் ஒரு கால் வந்தது
ஒரு 22 வயசு பொண்ணு நைட் முழுக்க பஸ்ட்டாண்டையே சுத்திட்டு இருக்காங்க பார்க்க நல்ல ஹிஜாப் போட்டுட்டு கைல ஒரு பேக் கோட நிக்கிறாங்கனு...!
உடனே அந்த இடத்துக்கு நானும் இன்னொரு உளவியல் ஆலோசகரும் போனோம்...!
அந்த இடத்துலருந்து அந்த பெண்ணை பத்திரமா ஹாஸ்பிடல்க்கு அழச்சிட்டு வந்து அந்த பெண்ணோட பேச ஆரம்பிச்சோம்...!
சாப்டியாமா...! இல்ல...!
சரி சாப்பாடு வாங்க சொல்லிருக்கோம் வந்ததும் சாப்டுங்க...!
எந்த ஊர் நீங்க....! கண்ணியாகுமரி
ஏன் இங்க வந்துருக்கீங்க...!
எனக்கு (அந்த பையனோட பெயர்) வேணும் வேணும் வேணும்...!
அவன பாக்கணும்...!
சரி சரி.... அவர பாக்க நாங்க ஏற்ப்பாடு பன்றோம்...!
அவர உங்களுக்கு எப்படி தெரியும்...!
எனக்கு Facebook லதான் அவரு பழக்கம் ஆனாரு...!
என்ன லவ் பன்றாரு அவர நான் கல்யாணம் பன்னிக்கனும்...!
சரி சரி நீங்க என்ன படிச்சி இருக்கீங்க... கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் முடிச்சிருக்கேன்...!
ம்ம்ம்...!
இவ்ளோ படிச்ச புள்ளையா இருக்கீங்க ஏன் இவ்ளோ தூரத்துலேந்து இந்த நேரத்துல இங்க வர்றீங்க உங்களுக்கு எதும் ஆச்சுனா என்ன பன்றது...!
சரி அப்பா அம்மா மொபைல் நம்பர் தெரியுமா...!
தெரியும்...!
அந்த பொண்ணு நம்பர் சொன்னாங்க
கால் பன்னோம்...!
பாத்திமாவோட அம்மா வா னு கேட்டதும்...!
எதிர் பக்க குரல் ஓ னு அலறல் அழுகையோட...!
ஐய்யா என் பொண்ணு எங்க யா இருக்கா நீங்க யாரு... னு
ஒரு பயம் கலந்த பதற்றத்தோட அந்த அம்மா கேட்டதும்...!
அம்மா நீங்க பயப்பட வேணாம் உங்க பொண்ணு இந்த இடத்துல ஹாஸ்பிடல் ல பத்திரமா இருக்காங்க னு சொல்லி அந்த பொண்ணை பத்தி கேக்க ஆரம்பிச்சோம்...!
இதுவரை எத்தனை யோ கேஸ் இந்த ஃபீல்ட்ல பாத்துருந்தாலும்...!
அந்த அம்மா சொன்ன விஷியங்கள் ரொம்ப அதிர்ச்சியா கஷ்டமா இருந்தது...!
ஒரே பொண்ணு ரொம்ப செல்லமா வழத்துருக்காங்க...!
அதே. நேரத்துல ரொம்ப நல்ல பொண்ணு...!
ஸ்கூல் படிக்கிற வரையிலும் எந்த பிரச்சனையுமே சந்திக்காத நல்ல பொண்ணா இருந்துருக்காங்க...!
ஸ்கூல் டீச்சர்ஸ் கூட இந்த பொண்ண ஒரு ரோல் மாடலா மத்த புள்ளைங்களுக்கு சொல்ற அளவுக்கு...!
அப்றம் காலேஜ் படிக்க போறேனு சொன்னதும் இன்ஜினியரிங் காலேஜ் ல சேர்த்து விட்ருக்காங்க...!
அங்கயும் ரொம்ப நல்ல பொண்ணு தான் யார்ட்டையும் அதிகம் பழகாம வீட விட்டா காலேஜ் காலேஜ் விட்டு வீட்டு இருந்துருக்கு...!
செகண்ட் இயர் படிக்கும் போது ஆண்ட்ராய்டு போன் வாங்கி கேட்ருக்கு...!
அவங்க அப்பா வும் நல்ல காஸ்டலியான மொபைல் வாங்கி கொடுத்துருக்காங்க...!
அந்த மொபைல் வாங்கி மூனு மாசத்துல அந்த பொண்ணோட நடைத்தைல பல மாற்றம்...!
சரியா அப்பா அம்மாட்ட முன்ன போல பேசுறதில்ல...!
எப்பவுமே அந்த பொண்ணோட தனி அறைல தான் மொபைல் ல கால் சாட் னு பேசிகிட்டு இருந்தருக்கு...!
இத அவங்க அப்பா அம்மாவுமே ஆரம்பத்துல பெருசா எடுத்துக்கல
கொஞ்ச நாள் போக ரொம்ப நேரமாகியும் அந்த பொண்ணோட ரூம் தொரக்கவே இல்ல கடைசியா...!
கதவ வேகமா தள்ளி உள்ள போய் பார்த்த கைய அறுத்து சுய நினைவு இல்லாம கிடந்துருக்கு
பதறிப்போய் ஹாஸ்பிடல் ல சேர்த்ததுகப்புறம்
கேட்டப்போதான் அந்த பொண்ணு செல்லிருக்கு...!
ஒரு பையன Facebookல லவ் பன்றேன் அவன் இல்லாம என்னால வாழ முடியாது அவன் இப்போலாம் என்ட பேசமாட்றான் அதான் கைய அறுத்துகிட்டேனு...!
பின்ன அவனோட நம்பர் பார்த்து எடுத்து அவன் ட்ட பேசிருக்காங்க...!
அப்போ அவன் சொல்லி இருக்கான் நான் துபாய் ல வேலை பார்த்துட்டு இருக்கேன்...!
எனக்கு கல்யாணம் ஆகி 2 குழந்தை இருக்கு...!
நான் சும்மா டைம்பாஸ் க்காக தான் பேசினேன் உங்க பொண்ணு தப்பா எடுத்துகிச்சினு சொன்னதும்...!
அவங்க அப்பா கடுமையா அவன திட்டி இருக்கார்...!
ஏன்னா னா நிர்வாணமா அவன் எடுத்து அனுப்பின போட்டோஸ் கேலரி ல இருந்திருக்கு...!
அந்த பொண்ணும் அனுப்பிருக்கா...!
இவ்ளோ பிரச்சினை க்கும் காரணம் அவன் தான் அவன் மேல போலீஸ் ல கூட கம்ப்லெண்ட் கொடுத்துருக்கோம்னு சொல்லி ரொம்ப நேரம் அழுதாங்க அவங்க அப்பா அம்மா ரெண்டு பேரும்...!
அவங்கள சமாதான படுத்தி...!
ஏன் உங்க பொண்ணு இங்க வந்தாங்க னு கேட்டதுக்கு...!
அவன் என் பொண்ணோட வாழ்க்கை ய சீரழிச்சிட்டு பொய்ட்டான்...!
இன்னும் அவ அவனோட நினைப்பிலயே அழஞ்சிட்டு இருக்கா...!
அவள எவ்ளோ பத்திரமா வச்சி இருந்தாலும் உங்க இருந்து ஓடிர்ரா...!
ஓடிவந்து அவனோட ஊர்ல வீதி வீதியாசுத்துற இதோட ஒரு அம்பது தடவை இப்படி வந்துட்டா...!
அவள அங்கேயே பத்திரமா வச்சிங்கோங்க ஐயா நாங்க உடனே வரோம்னு சொல்லி போன வச்சிட்டாங்க...!
இப்போ அந்த பெண்ணுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதால தொடர் சிகிச்சை ல வச்சிருக்க ஏற்பாடு செஞ்சிருக்கோம்...!
ஏன் இவ்ளோ பெரிய. பதிவா நான் இங்க பதிவிட்றேனா...!
இன்னிக்கி இதுபோல நிறைய பேர் இந்த முகநூல் பயன்படுத்தி...!
பல பெண்களோட வாழ்க்கை ய சீரழிச்சிட்டு இருக்காங்க...!
அதிகமா கல்யாணம் ஆனவங்கதான் இந்த தவறை பண்றாங்க...!
இந்த ஆசை பேச்சுக்கள்ல விழுந்து சீரழியாம பெண்கள் தன்னை பாதுகாத்துக்கனும்...!
ஒரு விழிப்புணர்வுகாக தான்...!
அப்படி கீழ்தரமான எண்ணத்தோட பழகுற (சில) ஆண்களுக்களுக்கு சொல்ற விஷியம் ஒன்றுதான்...!
பெண்பாவம் பொல்லாதது...!
அவங்களோட சாபம் உங்க வாழ்க்கையை நாசமாக்குவது நிச்சயம்...!
அதே நேரத்துல இந்த பொண்ணுங்களும் எவ்ளோ சம்பவங்கள் கேள்வி பட்டாலும் தெரிஞ்சாலும்...!
திரும்பவும் பல பேர் இப்படி சிக்கி சின்னாபின்னாமிகிட்டேதான் இருக்காங்க...!
இந்த சம்பவத்தையும் சாதாரணமா கடந்து போய்டாம...!
யாரோ ஒருவர் வாழ்க்கை இந்த மாதிரி பாதிக்கப்படப்போகுதுனு உங்களுக்கு முன் கூட்டியே தெரிஞ்சா அவங்கள காப்பாத்துங்க...!
முடிஞ்சா உங்க பக்கத்திலும் காப்பி பேஸ்ட் பன்னி ஒரு விழிப்புணர்வு ஏற்ப்படுத்துங்க...!
No comments:
Post a Comment