எம்.ஜி. ஆர்., முதல்வராக இருந்த போது, 'அண்ணா' நாளிதழின் கேள்வி - பதில் பகுதியில் ஒரு வாசகர், 'உங்கள் கட்சிக்கு வாரிசு யார்?' என்று கேட்டார். அதற்கு, 'திறமை உள்ளவர் கட்சிக்கு தலைமை ஏற்று வழி நடத்தட்டும்; கட்சிக்கு வாரிசு யார் என்று சொல்ல மாட்டேன்' என பதிலளித்தார்.
எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின், 132 அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களில், 98 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன் வி.என்.ஜானகி முதல்வரானார்; மீதி, 34 எம்.எல்.ஏ.,க்கள் ஜெயலலிதாவுக்கு ஆதரவு அளித்தனர். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க, போதிய எம்.எல்.ஏ.,க்கள் பலம் இல்லாததால், தி.மு.க.,வின், 24 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு கேட்டு, கருணாநிதியிடம் ஆர்.எம்.வீரப்பனை துாது அனுப்பினார் வி.என்.ஜானகி; கருணாநிதி ஆதரவு தரவில்லை என்பதால், 22 நாளில் ஆட்சி கவிழ்ந்தது.
ஆட்சி கவிழ்ந்தது பற்றி, அ.தி.மு.க., தொண்டர்கள்கவலைப்படவில்லை. மாறாக, ஆட்சியைக் காப்பாற்ற கருணாநிதி வீட்டு வாசலை மிதித்ததே தவறு என்று, ஜானகி மீது கோபம் கொண்டனர். அதனால், ஜானகி ஆட்சியை கவிழ்த்த ஜெயலலிதாவின் செயலை தொண்டர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதுவே, ஜெயலலிதாவுக்கு சாதகமானது; கட்சியையும், அவர் தன் வசப்படுத்தினார்.
இவை உட்பட, வேறு பல விஷயங்களும் பன்னீருக்கு பாதகமாக மாறின. அதனால், இது தான் சரியான சந்தர்ப்பம் என்று பன்னீரை ஓரங்கட்டி, ஒற்றைத் தலைமையாக உருவெடுக்க நினைக்கிறார் பழனிசாமி. எம்.ஜி.ஆர்., சொன்னபடி தி.மு.க.,வை எதிர்த்து அரசியல் செய்யும் திறமை, ஜெயலலிதாவுக்கு அடுத்ததாக பழனிசாமியிடம் உள்ளது என்பது, சமீபத்திய நிகழ்வுகள் வாயிலாக உறுதியாகின்றன. ஆனாலும், காலம் யாருக்கு சாதகமாக உள்ளது என்பது, அடுத்த சில நாட்களில் தெரிந்து விடும்.
No comments:
Post a Comment