Saturday, June 25, 2022

வெள்ளந்தி மனுசங்க…

 மொதலாளி தெக்காட்லருந்து ஒரு பொம்பள புருசங்கூட சண்டபோட்டுட்டு ஊரூரா சுத்திட்டு நம்மூருக்கு வந்து சேந்துருக்கா ஆளும் நல்லாத்தா இருக்கா. நானும் நம்ம தொழுவுல இருக்க சொல்லிருக்கேன் நம்ம காடுகரைல வேல பாத்துட்டு கெடக்கட்டும்னு" இது மாரி.


மோலாளியும் சரிலன்னு சொல்லிட்டு போயிட்டாரு. மறுநா காலைல பருத்திகாட்டுக்கு போனா அங்க அவ பருத்தியெடுத்துட்டிருந்தா. இவருக்கு அதுமேல லயிப்பாயிரிச்சி. அப்டியே மரத்தடி பக்கம்போனா வீட்டம்மா நாயிக்கி சோறு ஊட்டி விட்டுட்டுருக்கு. நாயின்னா அந்தம்மாக்கு கொள்ள பிரியம். வீட்டுப்பக்கம் அனாசியமா ஒத்த ஆள வர விடாது. இந்தம்மாவ பாத்தா மட்டும் என்ன கத்து கத்துனாலும் அப்டியே பம்மீரும். மொதலாளியும் ஒரே ரோசனயா வீட்டுக்கு வந்தா குடிமகன் மூஞ்சி வழிக்க தயாரா இருந்தான். மரத்தடில பலகய போட்டு உக்காந்தவரு அவ ரோசனாயாவே இருக்காரு. மோலாளி முடிஞ்சதுன்னு சொல்லிட்டு எந்திரிச்சி போயிட்டான். குளிச்சிட்டு தெரணைல உக்காந்தா மாரி வந்துட்டான் வந்து என்ன மோலாளி ஒரு வடியா இருக்கீகன்னு கேக்க, ஒன்னுமில்லடான்னு சொல்லிட்டு விட்டத்தயே பாத்துட்டிருந்தாரு மனுசன். மாரியும் ஒரு வடியா சிரிச்சிட்டே போயிட்டான். ரெண்டு மூனு நா செண்டு அவ சம்பளம் வாங்க வந்தவ மோலாளி மோலாளிந்னு அப்பிடி பிரியமா பேசுனா இவரு அசந்து போயிட்டாரு மனுசன். பருத்தியும் ஓஞ்சி போச்சி. அவளுக்கு வேலயில்ல. வீட்டமாட்ட சொல்லி வீட்டு வேலய கூடாமாட ஒத்தாசியா செய்யுறதுக்கு வச்சிகிட்டாரு. அந்தம்மாவும் ரெம்ப அப்பிராணி. ஏகாதசயமா கோவம் வந்திரிச்சின்னா அவ்வளவுதான். கருசக்காடு செவக்காடு ஆகுற அளவுக்கு ஆகாத்தியம் செஞ்சிரும். அவளும் வீட்டு வேலக பாத்துட்டிருக்க அவளுக்கும் இவரு மேல லயிப்பாகி போச்சி. ஒரு நா வீட்டம்மா ஏல மாரி எங்கய்யாவுக்கு மேலுக்கு சரியில்லயாம் வில்லு வண்டில கூளத்த போட்டு சமுக்காளத்த எடுத்து போடுலன்னு சொன்னதுதான் தாமுசம் மாரி மொதலாளிகிட்ட போயி அம்மா ஊருக்கு போறாகன்னு சொல்லிட்டு வண்டிய ஒதுங்க வச்சிட்டிருந்தான். இவருக்கு ஒரே சந்தோசம். வீட்டம்மா வண்டி கெளம்பிரிச்சி. அவள வீட்டுக்கு வர சொல்லிட்டாரு. நாய வீட்டு முன்னாடி கெட்டி போடுட்டாரு. யாராச்சும் வந்தா நாயி கொலைக்கும் அவள பொறவாச வழியா வெளில அனுப்பிரலாம்னு. ரெம்ப நேரங்கழிச்சி வண்டி போயிட்டிருக்கும்போதேமு ஏல வண்டிய திருப்புல.நம்ம தோட்டத்து எளனின்னா ரெம்ப பிரயாச படுவாரு. வெட்டு கெடக்குல்ல எடுத்துட்டு போயிரலாம்னு சொல்ல, மாரிக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. வண்டி வீட்டுக்கு வந்திரிச்சி. வெளில நாய் கெட்டி கெடக்கு. நாயிதான் இந்தம்மாவ பாத்தா கொலைக்காதே.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...