Saturday, June 25, 2022

ஏமாந்த காங்கிரஸ், சிவசேனா.

 மஹாராஷ்டிரா அரசியலில் நடக்கும் அதிரடி காட்சிகள் நிமிடத்திற்கு நிமிடம் மாறிக் கொண்டிருக்கின்றன. சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி 'மெஜாரிட்டி'யை இழந்து எந்த நேரமும் கவிழும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

'மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவிற்கு, அவருடைய சிவசேனாவிற்குள் என்ன நடக்கிறது என்பது தெரியவேயில்லை; ஏமாந்துவிட்டார்' என அரசியல்வாதிகள் மற்றும் விமர்சகர்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.ஆனால், 'இந்த விஷயத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது காங்கிரஸ்; ஏமாந்தது அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்' என்கின்றனர் விமர்சகர்கள். கூட்டணி ஆட்சியில் இப்படிப்பட்ட பிரச்னைகள் வரும் போது மிகவும் 'பவர்புல்' ஆக இருப்பவர் சட்டசபை சபாநாயகர்.
மஹா., சட்டசபையின் சபாநாயகர் பதவி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டு, காங்., எம்.எல்.ஏ., நானா பட்டோல் சபாநாயகரானார். ஆனால், அவரை பதவி விலக சொல்லி மாநில காங்., கட்சி தலைவராக்கிவிட்டார் ராகுல். இதன்பின் சபாநாயகர் பதவிக்கு யாருமே நியமிக்கப்படவில்லை. ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த பதவி காலியாக உள்ளது.

முன்னாள் காங்., மஹாராஷ்டிர முதல்வர் பிருத்வி ராஜ் சவுகானை சபாநாயகராக நியமிக்க காங்., முடிவு செய்திருந்தது. ஆனால், அதில் அதிக கவனம் செலுத்தவில்லை ராகுல். துணை சபாநாயகர் சரத் பவார் கட்சியைச் சார்ந்தவர். இவர் தான் அனைத்து முடிவுகளையும் எடுக்கப் போகிறார்.


latest tamil news



அடுத்து, 'நேஷனல் ஹெரால்டு' பண பரிமாற்ற மோசடி விவகாரத்தில் காங்., தலைவர் சோனியா,அவரது மகன் ராகுல் மீது அமலாக்கத் துறை கிடுக்கிப்பிடி போடவே, இருவரும் அதில் முழு கவனம் செலுத்தி மஹாராஷ்டிராவை மறந்துவிட்டனர்.சிவசேனா எம்.எல்.ஏ.,க்கள்
மத்தியில் அதிருப்தி இருப்பதும், அவர்கள் முதல்வர் உத்தவ் தாக்கரேக்கு எதிராக திரும்புவர் என்பதும் கூட்டணி கட்சியான தேசியவாத காங்.,கின் தலைவர் சரத் பவாருக்கு முன்பே
தெரியுமாம். ஆனால், அவர் முதல்வரை எச்சரிக்க தவறிவிட்டார்.ஆக, மஹாராஷ்டிரா அரசியல் விவகாரத்தில் ஏமாந்தது காங்கிரசும், சிவசேனாவும் தான் என்கின்றனர் விமர்சகர்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...