Sunday, June 26, 2022

எவ்வளவு மரியாதை தருகிறோம்?"

 நம் மனைவிதானே எப்படி நடந்தாலும் பரவாயில்லை என கணவனும்,...

நம்..கணவன் தானே எப்படி பேசினாலும் பரவாயில்லை என மனைவியும் எண்ண வேண்டும்.! அதுதான் இனிமையான வாழ்க்கையை தரும்.
புதிதாக அறிமுகமாகும் யார் என்றே தெரியாண ஒருவரிடமே,
hi sir how r u? Nice to meet u என்கிறோம்...
இடையில் இருமுகிறோம், தும்முகிறோம் I'm sorry sir என்கிறோம்..பேச்சுக்கிடையில் ஒரு தொலைப்பேசி அழைப்பு வருகிறது, உடனே
excuse me sir சொல்றோம் ..அந்த நபரைச் சந்தித்தே 10-20 நிமிடம்தான் ஆகியிருக்கும்...
அதன்பின் அவரைச் சந்திப்போமா என்றே தெரியாது.... ஆனாலும் எவ்வளவு மரியாதை தருகிறோம்?"
ஆனால் நம் வாழ்நாள் முழுதும் நம்மோடு வாழ்கிற கணவனை.... மனைவி மதிக்கிறாளா...? அல்லது மனைவியை கணவன் மதிக்கிறானா... எனறால் அதன் பதில் 100 க்கு 80சதவீதம், இல்லைதான்...
கணவனின் கரிசனையை,
திறமைகளை பாராட்டுறதுமில்லை, அசதியாக வேலை முடிந்து வீடு திரும்பும் கணவன்கிட்ட, ஏங்க, ரொம்ப வேலையா, காலையிலேர்ந்து நான் உங்களை ரொம்ப மிஸ் பன்னிட்டேனுங்கன்னு மனைவியும் சொல்றதில்லை...
மனைவியும் ஓய்வாகவோ.. அல்லது களைத்து அமர்ந்திருக்கையில்.. இன்று வீட்டு வேலை அதிகமா... என கனிவான பார்வையோடு கேட்கும் கணவன் மாணவர்களும் 10% மட்டுமே!
இதெல்லாம் சொல்லணும்...
அப்படி ஒருத்தரோட உணர்வை இன்னொருத்தர் புரிஞ்சிகிட்டு வாழ ஆரம்பித்தால்தான் வாழ்க்கை இனிக்கும் ருசிக்கும்.
கணவனோமனைவியோ... மருத்துவ மனையிலோ.. படுக்கையிலோ... இருந்தால் கூட இருந்து கவனிப்பவர்... கணவனோ... அல்லது மனைவியோ தான்சுமார் ஒரு மாத காலம் மருத்துவமனையில்படுக்கையாக இருந்தால்....
முதல் ஒருவார காலம்.. பார்க்க வரும்,
உறவுகள் மற்றும் சொந்தங்கள்..
பின்னர் படிப்படியாக குறைந்து விடும்..
பின்னர் மகளோ...மகனோ நெருங்கியவர்கள் மட்டுமேவந்து போவார்கள்...... இறுதியில்கணவன் மனைவிமட்டுமே..ஒருவருக்கொருவர் துணையாக இருப்பர்.இறுதியாக ஒன்று...
நம்முடைய.
உறவு. நட்பு... குலம்.... சாதி... பங்காளி... பகையாளி... இனம்...சனம்.... பணம்... முதலாளி.... தொழிலாளி..... கட்சிக்காரன்.... எல்லாமே.....
ஞாபகமிருக்கட்டும்..கூடிக்கலையும் காக்கா கூட்டமே....
ஆக மனைவி.. மற்றும் இரத்த உறவுகளே... நம் வாழ்வின் இறுதிநாட்களில் துணையிருப்பார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...