Tuesday, June 28, 2022

தேர்தல் கமிஷன் பதிலால் அ.தி.மு.க.,வில் புது சர்ச்சை.

 அ.தி.மு.க.,வில் பொதுச் செயலர் பதவி நீக்கப்பட்டது செல்லாது என, பல்வேறு தரப்பினர் அளித்த புகார் மனுக்கள், நடவடிக்கையில் உள்ளதாக, தேர்தல் கமிஷன் தெரிவித்திருப்பது, அ.தி.மு.க., வட்டாரத்தில், புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

 தேர்தல் கமிஷன் பதில் ,அ.தி.மு.க., புது சர்ச்சை


அ.தி.மு.க.,வில் ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சி பொதுச் செயலராக சசிகலா, பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டார். அதன்பின், அவர் அப்பதவியில் இருந்து, பொதுக்குழு உறுப்பினர்களால் நீக்கப்பட்டார். கடந்த 2017ம் ஆண்டு, பொதுச் செயலர் பதவிக்கு பதிலாக, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன.
அவற்றுக்கு பொதுச்செயலர் பதவிக்கு உரிய அதிகாரங்கள் வழங்கப்பட்டு, கட்சி சட்ட விதிகள் மாற்றி அமைக்கப்பட்டன.இதை எதிர்த்து, முன்னாள் எம்.பி., - கே.சி., பழனிசாமி, கர்நாடக மாநில முன்னாள் அ.தி.மு.க., செயலர் புகழேந்தி உட்பட பலர், தேர்தல் கமிஷனில் மனு கொடுத்தனர்.


அதிகாரம் கிடையாது



கட்சியின் அடிப்படை விதிகளின்படி, பொதுச் செயலர், கட்சியின் அடிப்படை தொண்டர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும். இந்த விதியை மாற்ற பொதுக்குழுவுக்கு அதிகாரம் கிடையாது. பொதுச்செயலர் பதவிக்கு பதில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டதை அங்கீகரிக்கக் கூடாது என, மனு செய்தனர். அந்த மனு தேர்தல் கமிஷனில்
நிலுவையில் இருந்தது.அதன்பின், கட்சி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால், ஒற்றை ஓட்டு அடிப்படையில் தேர்வு செய்யப்பட வேண்டும் என, சட்ட விதிகளில் திருத்தம் செய்து, செயற்குழு ஒப்புதலுடன், தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.
தற்போது, ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற கோரிக்கை, கட்சியில் எழுந்துள்ளது. எனவே, மீண்டும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு பதிலாக, பொதுச்செயலர் பதவியை கொண்டு வர, இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளனர்.இதற்கு ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், கட்சியில் பெரும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுச் செயலர் பதவி நீக்கப்பட்டது செல்லாது எனக் கோரி, தேர்தல் கமிஷனில் கே.சி.பழனிசாமி, புகழேந்தி போன்றோர் கொடுத்த மனுக்களின் நிலை என்ன என, அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி முன்னாள் மாநில செயலர் அஸ்பயர் சுவாமிநாதன், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தேர்தல் கமிஷனிடம் விளக்கம் கேட்டிருந்தார்.


பல்வேறு கேள்விகள்



அதற்கு தேர்தல் கமிஷன், 'பொதுச்செயலர் பதவி தொடர்பாக பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் நடவடிக்கையில் உள்ளன' என, பதில் அளித்துள்ளது. அதைத் தொடர்ந்து, அந்த மனுக்கள் மீது, தேர்தல் கமிஷன் எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கும்; பொதுச் செயலர் பதவி நீக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கு

மா; செல்லும் என்று அறிவிக்குமா என, பல்வேறு

கேள்விகள் எழுந்துள்ளன.ஏற்கனவே, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை, தேர்தல் கமிஷன் அங்கீகரித்து, உட்கட்சி தேர்தல் நடத்திக் கொள்ள அனுமதி அளித்து உள்ளதால், அந்த மனுக்களை தேர்தல் கமிஷன் தள்ளுபடி செய்யும் என, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறுகின்றனர்.மீண்டும் பன்னீர்செல்வம் தரப்பு, தேர்தல் கமிஷன் செல்லும் என்பதால், கட்சியில் சிக்கல் அதிகரிக்கவே வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...