*வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் விலைமதிப்பற்ற பொக்கிஷம்.
அந்தப் பொக்கிஷத்தை நம்மில் எத்தனை பேர் சரியாக பயன்படுத்துகிறோம் என்பதுதான் நமது வாழ்க்கையை நாம் எப்படி வாழ்கிறோம் என்பதைத் தீர்மானிக்கிறது.
சில நேரங்களில் நம் எண்ணங்களை மட்டும் சரி செய்தால் போதும் நம் வாழ்க்கையே சரியாவதை உணர முடியும்.சில நேரங்களில் பிரச்சினைகளைப் பற்றி சிந்திப்பதை நிறுத்தினாலே போதும்.
பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தானே கிடைக்கும்.
ஏனென்றால் அங்கு பிரச்சனையே நமது தேவையற்ற சிந்தனைகளும் குழப்பங்களுமாகத்தான் இருக்கும்.
எண்ணங்களை அழகாக மாற்ற முயற்சி செய்யுங்கள். வாழ்க்கையும் அழகாக மாறுவதை உணர்வீர்கள்.
மாற்ற முடிந்ததை மாற்றுங்கள். மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளப் பழகுங்கள்.
திருப்தியான நிறைவான வாழ்க்கையை வாழ்வதாக உணர்வீர்கள்.
நினைத்ததை அடைய விடாமுயற்சி செய்யுங்கள்.ஒரு வேளை அடைய முடியாவிட்டால் சோர்ந்து போகாமல் தேவையற்ற கவலைகளையும் குழப்பங்களையும் விட்டுவிட்டு.
உங்களுக்கு என்று உள்ளது நிச்சயமாக உங்களைத் தேடி வரும் என்ற நம்பிக்கையோடு எதிர்காலத்தை வரவேற்றுப் பாருங்கள்.
எதிர்காலத்தின் ஒவ்வொரு நாளும் சொர்க்கமாகும்.
தேவையற்ற சிந்தனைகள் எனும் சிறிய வட்டத்திற்குள் சிக்கி உங்கள் வாழ்க்கையை வீணாக்கி விடாதீர்கள்.
வாழ்க்கை வாழ்வதற்கே, வாழ்ந்து பார்த்து விடுங்கள்.முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…
No comments:
Post a Comment