Wednesday, June 29, 2022

எண்ணையில் சிறிது இஞ்சியை நசுக்கி வேகவிட்டு எடுத்தபின் பயன்படுத்துங்கள்.

 தமிழ்நாட்டில் நிலக்கடலை விளைச்சல் அதிகம் அதனால் கடலை எண்ணெய். எள்ளும் விளைந்தது..

நல்ல எண்ணை.
கேரளாவில் தேங்காய் விளைச்சல் அதிகம். அனைத்துக்கும் தே.எண்ணை.
வட இந்தியாவில் கடுகு விளைச்சல் அதிகம்…
எனவே கடுகு எண்ணெய்.
ஒரு பொருளை சமைக்க தீயில்/ஆவியில்/எண்ணெயில் வேக வைக்கலாம். ஆகவே எண்ணெய் என்பது பொருளை வேகவைக்க/பொறிக்க பயன்படும் மீடியா. அவ்வளவுதான்.
தலைமுறை தலைமுறையாக இவற்றை பயன்படுத்தி வந்தோம். எங்கிருந்தோ வந்த சூரியகாந்தி விதை எண்ணெயை இங்கே விற்க இவர்கள் எடுத்த விளம்பர தந்திரம் "கொலாசுட்ரால்."
அப்படி பார்த்தால் தவிட்டு எண்ணெய் (தண்ணீர் மாதிரி இருக்கும்..ருசியே கிடையாது) வியாபாரமாகி இருக்க வேண்டும்.
விளைவு இங்கே க.எண்ணை வியாபாரம் படுத்து…கடலை உற்பத்தியும் நிறுத்தப்பட்டது. பல தோட்டங்களில் சூரியகாந்தி பயிரிடப்பட்டது.
விலைவாசி ஏற்றம்…காரணமாக மலேசியாவிலிருந்து மலிவான பாம் ஆயில் இறக்குமதி செய்யப்பட்டு இப்போது ந.எண்ணை விலை க்கு வந்து விட்டது.
இடையில் ஆலிவ் எண்ணையை விற்க பார்த்தார்கள். அதை இங்கே விளைவிக்க முடியாது என்பது தெரிந்ததும் பின் வாங்கிவிட்டார் கள்.
உங்களுக்கு எந்த எண்ணை ருசிக்கிறதோ, ஒத்துக்கொள்கிறதோ உங்கள் பொருளாதாரத்துக்கு ஏற்றதாக இருக்கிறதோ அதை பயன்படுத்துங்கள்.
அந்த எண்ணை பச்சை வாசனை பிடிக்க வில்லை எனில்(க.எண்ணை/பாம்ஆயில்) கொதிக்கும் எண்ணையில் சிறிது இஞ்சியை நசுக்கி வேகவிட்டு எடுத்தபின் பயன்படுத்துங்கள். திருநெல்வேலி பழக்கம்.
அனைத்து பலகாரங்களும் நன்றாகவே இருக்கும்.
ஆடுகளையும் கோழிகளையும் உள்ளே தள்ளுவதால் வரும் கொழுப்பை விடவா சில மில்லி பாமாயிலில் வந்துவிடப் போகிறது...
ஆனால் இப்போது சிறப்பான மரச்செக்கு எண்ணெய் மற்றும் நல்ல எண்ணெய் கிடைக்கின்றது..
கலப்படம் இல்லாமல் இருந்தால் சரி..
சிந்தனைக்கு...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...