பழங்குடி இனத்தை சேர்ந்த திரவுபதி முர்முவை பாரதிய ஜனதா குடியரசுத் தலைவர் வேட்பாளராக இன்று அறிவித்துள்ளது.
இந்தியாவில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக முதன் முதலில் அறிவித்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா.
2012 ம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மெஹாலயா மாநில முன்னாள் முதல்வரும் பழங்குடி இனத்தை சேர்ந்தவருமான பி.ஏ.சங்மாவை வேட்பாளராக அறிவித்தார் ஜெயலலிதா.
அப்போது ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் அவர்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக உடனே கூறினார்.
சங்மாவுக்கு பாரதிய ஜனதாவும் அப்போது ஆதரவளித்தது.
இருப்பினும் பாரதிய ஜனதாவுக்கு போதிய ஆதரவு இல்லாததால் பிரணாப் முகர்ஜியிடம் தோல்வியடைந்தார் சங்மா.
No comments:
Post a Comment