Wednesday, June 22, 2022

எடப்பாடி யாருக்கு 8 வது அதிர்ஷ்டக் காற்று வீசுமா ? அல்லது மூன்றாவது முறையாக இரட்டை இலை மொடக்கப்படுமா ?

 அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ஒழிக்கப்பட்டு

ஒற்றைத் தலைமை உருவாக்கும் முயற்சி அதிமுகவிற்கு பலம் சேர்க்குமா ? என எனது முன்னோட்ட பதிவில் வினா எழுப்பி இருந்தேன்
அது குறித்து விரிவாக பார்ப்போம்
திமுகவில் முன்னணித் தலைவராக இருந்த எம.ஜி.ஆர். அவர்கள் கலைஞர் மு கருணாநிதி அவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து திமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்
அதன்பிறகு 1972ஆம் ஆண்டு அதிமுக என்ற புதிய கட்சியைத் துவக்கினார் எம்ஜிஆர் அவர்கள்
புதுக் கட்சி தொடங்க எம்ஜிஆர் அவர்களுக்கு இடதுசாரி கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தனது முழு ஆதரவையும் தொடர்ந்து தெரிவித்து அக்கட்சி காலூன்ற வழிவகுத்தது தமிழகத்தில்
அக்காலகட்டத்தில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மறைவையொட்டி நடைபெற்ற இடைத்தேர்தலில் அத்தொகுதியில் வளமாக வாக்கு வங்கி வைத்துக் கொண்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை நிறுத்தாமல் எம்ஜிஆரின் புதிய கட்சியான அதிமுக விற்கு ஆதரவு அளித்ததோடு மட்டுமல்லாமல்
அதிமுகவிற்கு தேர்தல் சின்னமான இரட்டை இலை சின்னத்தையும் அப்போது
தா.பாண்டியன் அவர்கள் தான் தேர்வு செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
அதோடு மட்டுமல்லாமல் முழு தேர்தல் பணியையும் அவர்களே நேரடியாக பங்கேற்று வெற்றிபெற வைத்தனர் அத்தேர்தலில் தேர்தல் பணிக்குழு தலைவராக நியமிக்க கூட அதிமுகவில் பெரும் தலைவர்கள் இல்லாத காரணத்தினால்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த வரதராஜன் என்பவர் தேர்தல் பணிக்குழு தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
அதிமுகவின் வேட்பாளராக நிறுத்தப்பட்ட மாயத்தேவர் அவர்கள் வெற்றி பெற்றவுடன் எம்ஜிஆர் அவர்கள் முதலில் வரதராஜன் அவர்களுக்கே தங்க மாலை அணிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்தத் தேர்தல் வெற்றி தான் அதிமுகவிற்கு முதன்முதலாக வீசிய அதிஷ்ட காற்றாகும்
அடுத்து கோயமுத்தூர் மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர் மறைவையொட்டி நடைபெற்ற இடைத்தேர்தலில் அத்தொகுதியில் முன்னணி கட்சிகளாக இருந்த
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வேட்பாளரை நிறுத்தாமல்
அதிமுக க்கு ஆதரவுஅளித்தனர் அந்தவகையில் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரான அரங்கநாயகம் அவர்கள் வெற்றி பெற்று அதிமுக வின் முதல் சட்டமன்ற உறுப்பினரானார் இந்த இரண்டாவது வெற்றியின் மூலம் இரண்டாவது அதிர்ஷ்டக் காற்று வீசியது அதிமுகவிற்கு
இடதுசாரி கட்சிகளின் பிரச்சார உத்திகளாகும் வலிமையான வாக்கு வங்கிகளாளும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருந்த போதும்
மக்கள் தொடர்பு சாதனங்கள் அனைத்தும் எம்ஜிஆர் அவர்களின் தனிப்பட்ட வெற்றியாக பிரசுரித்து பிரச்சார உத்திகளை கையாண்டு அதிமுக என்ற கட்சியை அசுர வளர்ச்சிக்கு கொண்டு சென்றனர்
பிறகு 1977ம் ஆண்டு பொதுத் தேர்தல் வந்தது அந்தத் தேர்தலில் காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபட்டது காங்கிரஸ் என்றும் ஜனதா கட்சி என்றும் தேர்தலை எதிர் கொண்டனர் திமுக ஒரு அணியாகவும் அதிமுக ஒரு அணியாகவும் தேர்தலை சந்தித்த வகையில்
எம்ஜிஆர் தலைமையில் ஆட்சி அரியணையில் அமர்ந்தது அப்போதைய அதிமுக வெற்றி என்பது காங்கிரஸ் கட்சி பிளவுபட்டு காங்கிரஸ் ஜனதா என்று பிளவுபட்ட காரணத்தினாலேயே
அதிமுக வெற்றி பெற்றது
ஒருவேளை திமுகவிலிருந்து எம்ஜிஆர் வெளியேறிய காலகட்டத்தில் காங்கிரஸ் பிளவுபடாமல் இருந்திருக்குமேயானால் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்புகள் பிரகாசமாக இருந்தது என்பதை 1977 வாக்கு வங்கியின் கணக்குப்படி அறிந்து கொள்ளலாம் இத்தகைய சூழ்நிலை அதிமுகவுக்கு மூன்றாவது அதிர்ஷ்ட காற்றாகும்
ஆட்சிக்கு வந்த எம்ஜிஆர் அவர்கள் 10 ஆண்டுகள் ஆட்சி செய்தார் அவர் மறைந்ததை ஒட்டி
அதிமுக ஜெ. ஜா. அணியாக இரண்டாகப் பிளவுபட்டது அப்போது 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக ஓர் அணியாகவும் காங்கிரஸ் ஓர் அணியாகவும் ஜா.ஜெ.
வெவ்வேறு அணியாகவும் தேர்தலை எதிர் கொண்டன அப்பொழுது வட மாவட்டங்களில் வளமையாக காலூன்றிய வன்னியர் சங்கம் தேர்தல் புறக்கணிப்பு செய்தனர்
அத்தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்தது காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி தலைவர் வரிசையில் வந்தது அத்தேர்தலில் ஜெ. அணி கணிசமான இடங்களை வடமாவட்டங்களில் பெற்றிருந்தது இதற்கு காரணம் ஜெ.அணியின் அப்போது அவைத்தலைவராக இருந்த அரசியல் அனுபவம் வாய்ந்த
"எம்பி சுப்பிரமணியம்"
அவர்களின் சாதுரிய தன்மையாகும்
தேர்தலுக்குப் பிறகு
இந்தி எதிர்ப்புப் மாணவப் போராளி
"எம்.என்.நடராஜன்"
அவர்களின் குடும்பத்தினரின் தீவிர சாதுரிய முயற்சியினால் ஜெ. ஜா. ஒன்றுபட்டு இரட்டை இலை
மீக்கப்பட்டது பிறகு மதுரை மேற்கு மருங்காபுரி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸை விட சட்டமன்ற உறுப்பினர் கூடுதலாக கிடைத்த காரணத்தினால் செல்வி ஜெயலலிதா அவர்கள் எதிர்க்கட்சித் தலைவரானார்
இந்தப் பதவி வன்னியர் சங்கத்தின் தேர்தல் புறக்கணிப்பு காரணமாக செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற பதவி என்பதோடு நான்காவது அதிர்ஷ்ட காற்றாகும் அதிமுகவிற்கு
பிறகு 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் ஒன்று பட்ட அதிமுக காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி ஏற்படுத்தி தேர்தலை எதிர்கொண்டது அத்தேர்தலில் சென்னைக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த ராஜீவ் காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கூட்டணிக்கு மிகப்பெரிய அனுதாப அலை வீசியது அதன் காரணமாக அப்போது செல்வி ஜெயலலிதா அவர்கள் முதல்வராக முதல்முதலாக அரியணையில் அமர்ந்தார் ராஜீவ் காந்தி அவர்களின் கொலையின் காரணமாக அதிமுகவிற்கு ஐந்தாவது அதிஷ்ட காற்று வீசியது
அதன் பிறகு தேர்தலில் தொடர்ந்து வெற்றி தோல்வி என இரண்டையும் சம அளவில் சந்தித்து வந்த அதிமுக 2016 ஆம் ஆண்டு செல்வி ஜெயலலிதா அவர்களின்
மறைவையொட்டி திருமதி சசிகலா நடராஜன் அவர்களின் சாதுரிய தன்மையால் புதிய ஆட்சி
அமை க்கப்பட்டு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல்வராக பதவியேற்றார் அதிமுக என்ற போர்வையில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு 6 வது அதிர்ஷ்டக் காற்று வீசியது
பிறகு இடைத்தேர்தல் மூலம் மூழ்கும் கப்பலாக இருந்த அதிமுகவை இழுவைக் கப்பலாக இருந்து பாமக என்ற கட்சி அதிமுக என்ற கட்சியை கரை சேர்த்தது இது அதிமுகவிற்கு 7 வது அதிர்ஷ்டக் காற்றாக அமைந்தது
இவற்றையெல்லாம் தொடர்ந்து தற்போது அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என இரு பதவிகள் இருந்த நிலையில்
இணை ஒருங்கிணைப்பாளராக பதவி வகித்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் கை ஓங்கிய நிலையில் ஒற்றைத் தலைமையை தாம் கைப்பற்றி விடலாம் என்ற கோணத்தில் காய் நகர்த்தி வருகிறார் அவற்றில் அவர் வெற்றி பெற்றால் அ தி மு க என்ற போர்வையில் 8 வது அதிஷ்ட காற்றாக அமைந்துவிடும்
அதற்கு நாளை (23/06/2022/)சென்னையில் நடைபெறும் அதிமுக பொதுக்குழுவில் எந்தக் கலவரமும் இல்லாமல் அமைதியான சூழ்நிலை ஏற்படவேண்டும் ஏற்படுமா ?
அல்லது பொதுக்குழுவில் பெரும் கலவரம் ஏற்பட்டு அதிமுக தலைமை அலுவலகம் மூடப்பட்டு மூன்றாவது முறையாக இரட்டை இலை முடக்கப்படுமா
அல்லது ஓ பன்னீர்செல்வம் தரப்பினரால் தொடரப்பட்ட வழக்கின் காரணமாக நீதிமன்ற தீர்ப்பு இடையூர் ஏற்படுத்துமா என்பதெல்லாம்
நாளை தெரியும்
ஒருவேளை அமைதியான சூழ்நிலையில் பொதுக்குழுவில் அவர் ஒற்றைத் தலைமையாக பொதுச்செயலாளராக பதவி ஏற்றுக்கொண்டாலும் கூட அவர்
திமுகவை எதிர்த்து தொடர்ந்து அரசியல் செய்தால் மட்டுமே அதில் அவர் தொடர முடியும்
மேலும் அதிமுக என்ற கட்சியில் தொண்டர்கள் தொடங்கி தலைவர்கள் வரை கொள்கை கோட்பாடு மக்கள் நலன் சார்ந்தவை போன்றவைகளில் தெளிவு பெற்றார்களா இல்லையா என்பதைவிட
அக்கட்சியின் தலைமை பொறுப்பில் இருப்பவர் திமுகவை எதிர்க்க வேண்டும் அந்த ஓர் தகுதி இருந்தாலே அக்கட்சியின் தொண்டர்கள் அவரை முழுமனதோடு ஏற்றுக் கொள்வார்கள்
எடப்பாடி பழனிச்சாமி
ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு தலைவர்களில் யார் ஆளும் திமுக என்ற ஒரு கட்சியை தொடர்ந்து எதிர்த்து அரசியல் செய்கிறார்களோ அவர்கள் பக்கம் அதிமுக தொண்டர்கள் இருப்பார்கள் என்பதே எங்களின் கருத்து
அதேபோன்று எடப்பாடியார் அவர்கள் ஒருவேளை இந்தப் போட்டியில் வெற்றி அடைந்து அரசியலில் காலூன்றினால் அவருடைய அரசியல் வெற்றிக்குத் தடையாக இருக்கின்ற தமிழகத்தின்
சிறிய கட்சிகள்
சின்னாபின்னமா க்கப்படும் என்பதை மறுக்க இயலாது
அதோடு மட்டுமல்லாமல் எம்ஜிஆர் கலைஞர் ஜெயலலிதா ஆகியோர்களை எதிர்கொண்ட கட்சியினர் இவரிடம் ஏமாந்து போவார்கள் என்பதை எதிர்காலம் சொல்லும்
எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திமுகவை எதிர்கொண்டு 8 வது அதிஷ்ட காற்றை பெறுவாரா
அல்லது மூன்றாவது முறையாக இரட்டை இலை மோடக்கப்படுமா நாளை பார்ப்போம் ?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...