கடவுள் முரண்பாடு உடையவர்.
உனக்கு எது மிகவும் பெரியதாக தெரிகிறதோ அதை விட பெரியவர். அவர் பெரியதை விட பெரியவர். எது நம் பார்வைக்கு பெரியது. பிரபஞ்சம். அதை காட்டிலும் பெரியவர் கடவுள். உனக்கு எது சிறியதாக தோன்றுகிறதோ அதை விட சிறியவர் கடவுள். எது சிறியது. அணு. அதை விட சிறியவர் கடவுள். பெரியவரும் அவரே சிரியவரும் அவரே.
அனைத்து ஜீவராசிகளின் இதயத்தில் இருக்கிறான். எங்கே சூரிய ஒளியின் நிலவொளியும் புக முடியவில்லையோ, எது மாயைக்கு அப்பாற்பட்ட இடமோ, எங்கே ஒரு ஆன்மா சென்றால் திரும்பி பிறப்பெடுக்காதோ அங்கே இருக்கிறான் கோவிந்தன். சுருக்கமாக சொன்னால் அவன் எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கிறான். அவன் இல்லாத இடமே இல்லை
அவன் மிக தூரத்தில் இருக்கிறான். அவனை எத்தனை வருடங்கள் ஜென்மங்கள் தேடி அலைந்தாலும் அவன் கை கால்களை கூட பார்க்க முடியாது. அதே நேரத்தில் அவன் நம் அருகில் இருக்கிறான். நமக்கும் அவனுக்கும் நூலிழை தூரம்தான்.
அவனுக்கு நம்மை போல் ஐம்புலன்கள் இருக்கிறதா? அவன் ஒளி வடிவானவன். உருவமற்றவன் என்றால் எப்படி நம்முடைய பிரார்த்தனைகளை கேட்கிறான் ? நம்மை பார்க்கிறான். உண்மை என்னவென்றால் எங்கும் கண்ணனின் காதுகள். எங்கும் கண்ணனின் கண்கள். எங்கும் அவன் கைகள் மற்றும் கால்கள். நாம் என்ன செய்தாலும் அவன் பார்நேரத்தில் அவனை போல் கருணை மிக்கவனும் இல்லை. அவனிடம் சரணடைந்து ஏதாவது வேண்டினால் ஓடி போய் கருணை மழை பொழிவான். உதாரணம் கஜேந்திர மோக்ஷம்.
அடடா ஒன்னும் புரிய வில்லையே.
No comments:
Post a Comment